
“பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.” – 3 யோவாண் 1:11
சில நேரங்களில் உலகத்தார், நாம் அவர்களுக்கு ஒத்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒத்தது என்ற சொல்லின் பொருள் “வடிவம் அல்லது தன்மை ஒத்ததாக இருக்க வேண்டும்; நடைமுறையில் உள்ள முறைகள் அல்லது பழக்க வழக்கங்களின் படி நடந்து கொள்வதாகும்.”
ரோமர் 12:2 கூறுகிறது, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காதீர் என்றும் …. மேலும் 3 யோவான் 1:11 தீமையைப் பின்பற்றாமல், தேவனின் நல்ல காரியங்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்றது.
மக்கள் எப்போதுமே தங்கள் சொந்த பாதுகாப்பின்மை காரணமாக, நம்மை அவர்களுடைய அச்சில் பொருத்த முயற்சிப்பார்கள். தாங்கள் செய்வதை வேறொருவர் செய்வாரென்றால் அவர்கள் அதைப் பற்றி நன்றாக உணர்வார்கள். வெகு சிலரே அவர்கள் யாராக இருக்கின்றார்களோ அப்படி இருக்கவும், பிறர் யாராக இருக்கிறார்களோ அப்படி இருக்கவும் அனுமதிக்கும் திறனைப் பெற்றிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் அப்படி செய்தால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒவ்வொரு நபரும் அவர் யார் என்பதில் பாதுகாப்பாக இருப்பார்கள். அதே போல் மற்றவர்கள் யாராக இருக்கிறார்களோ அப்படி அவர்கள் இருக்கவும் அனுமதிக்கும் போது, நாம் மற்றவர்களை பின்பற்ற முயற்சிக்க மாட்டோம்.
நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இந்த உலகத்தின் ஆசையை உடைத்தெறிய வேண்டுமென்று இன்று உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, உலகின் அச்சுக்கு இணங்குவதற்கான வலையில் என்னை விழாமலிருக்க செய்யும். நல்லதைப் பின்பற்றி கிறிஸ்துவைப் போல வாழ எனக்கு உதவும்.