“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” – மத்தேயு 11:28-30
என்னுடைய நடையின் ஆரம்ப நாளிலே அவரை நான் சேவிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவளாக இருந்ததால் எனக்கு கொஞ்சமே பிடித்து இருந்தாலும் அதை செய்ய ஒப்புக் கொண்டேன். அதனால் ஏற்பட்ட ஒரு பலன் என்னவென்றால் நான் எதை செய்ய அபிஷேகம் பெற்று இருக்கிறேன் என்பதை சீக்கிரமாகவே கண்டுபிடித்தேன்.
என் வாழ்க்கை அலுவல் மிகுந்ததாக இருந்ததால், நான் தேவனுடன் முறையாக நேரம் செலவிடாமல் இருந்தேன். நான் நற்காரியங்களை செய்து கொண்டிருந்தேன். ஆனால் அவரை நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். அதன் விளைவாகவே விரக்தியடைந்தவளாக காலம் கழித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் மாம்ச கிரியையே செய்து கொண்டிருந்தேன்.
“மாம்ச கிரியை” என்பது தேவனுடைய வல்லமை நம் மூலமாக பாய்ந்து செல்லாதபடி நாமாகவே செய்யும் காரியங்களாகும். அவை கடினமானவை, நம்மை அவை பெலனிழக்க செய்கிறது. அவை எவ்வித சந்தோஷத்தையும் நிறைவையும் உண்டாக்குவதில்லை. அவை அனேக வேளைகளில் நல்ல காரியங்களாக இருக்கின்றன. ஆனால் “தேவ காரியங்கள் அல்ல”.
மக்கள் தேவனை தங்களுடைய சொந்த பெலத்தால் சேவிக்க முயல்வதால், அவர்கள் செய்யும் மதம்சார்ந்த செயல்களே என்றாலும் களைப்படைந்து விடுகின்றனர். ஆனால் நாம் ஓயாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக இயேசு மரிக்கவில்லை…. நாம் அவர் மூலமாக தேவனுடன் ஒன்றாய் இருந்து பிதாவாகிய தேவன், குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுளுடன் ஒரு ஆழமான தனிப்பட்ட உறவை கொண்டிருக்கவே மரித்தார்.
இன்று உண்மையாகவே தேவனுடன் இருக்கும்படி சில மாம்ச கிரியைகளை வெட்டி எறிந்து விட வேண்டி இருக்கிறதா?
ஜெபம்
தேவனே, உம்மை உண்மையாக அறிந்து கொள்வதற்கு பதிலாக, நற்காரியங்களை மட்டும் செய்வது ஏற்புடையதல்ல என்பதை உணர்ந்து கொள்கிறேன். உம்முடன் நேரம் செலவிட, உபயோகமற்ற செயல்களை புறம்பாக ஒதுக்கி விடும்போது, இளைப்பாறுதல் அடைய எனக்கு உதவுவாயாக