“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” – சங்கீதம் 23:4
நமக்கு தேவைப்படும் பொருட்களையோ, நாம் விரும்புகின்ற பொருட்களையோ பெற்றுக் கொள்ள தேவனை நம்ப வேண்டுமென்று அனேக வேளைகளிலே நினைக்கிறோம். ஆனால் தேவன் பேரிலே உள்ள நம்பிக்கை உறவானது, ஏதாவது பெற்றுக் கொள்ள அவரை நம்புவதற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. நாம் விரும்பும் அந்த காரியங்களை பெற்றுக் கொள்ளும் அந்த முழு செயலினூடே அவரை நம்ப நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
என் வாழ்விலே, ‘இதெல்லாம் எனக்கும் வேண்டும் ஆண்டவரே’ என்று சில காரியங்களுக்காக ஊக்கமாக தேவனை நம்பின சமயங்கள் இருக்கிறது. அந்த காரியங்களைப் பெற்றுக் கொள்வது அதிமுக்கியமான காரியம் இல்லை என்பதை எனக்கு காட்டத் தொடங்கினார்.
அவர் எனக்கு, சூழ்னிலைகளினூடே, உறுதியோடும், நல்ல மனப்பான்மையோடும் தொடர்ந்து நடக்க, அவரை எப்படி போதுமான அளவு நம்புவது என்பதை கற்றுக் கொடுக்க விரும்பினார். நாம் சூழ்னிலைகளிருந்து வெளியே வர வேண்டும் என்று விரும்பும் போதெல்லாம் அவர் நம்மை மீட்காமலிருக்கலாம். ஆனால் அவற்றினூடே நாம் கடந்து செல்லும் போது அவர் எப்போதுமே நம்முடனே இருக்கிறார் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார்.
தேவன், நம்மை எந்த சூழ்னிலையிலிருந்து விடுவிக்க வேண்டுமென நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் அவர் அப்படியாக செய்வதில்லை. ஆனால் அவர் எப்போதுமே
நம்முடன் இருக்கிறார். இன்று, முடிவிலே மட்டும் நோக்கமாக இராமல் தேவன் உங்களுடன் இப்போதும் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே அந்த முழு செயலினூடாக அவர் உங்களுடன் நடக்க அவரை நம்புங்கள்.
ஜெபம்
தேவனே, இப்போது நீர் என்னோடு இருப்பதற்க்காக மகிழ்ச்சியடைகிறேன். நீர் எனக்கு பொருட்களை மட்டும் தர உம்மை நம்பாமல், என் வாழ்வின் அனுதின சூழ்னிலைகளினூடாக உம்மை நம்புகிறேன்.