நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். (சங்கீதம் 46:10)
பேசுவது எனக்கு எப்பொழுதும் எளிதாக வருகிறது, ஆனால் நான் கேட்க கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. என் கணவருடன் ஒன்றாக உட்கார்ந்து பேசி நேரத்தை செலவிட நான் விரும்பவில்லை என்று ஒருமுறை உணர்ந்தேன், அதனால் நான் அவரிடம், நாம் இன்னும் அதிகமாக பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் சொன்னார், “ஜாய்ஸ், நாம் பேசுவதில்லை. நீ பேசுகிறாய், நான் கேட்கிறேன்”. அவர் சொன்னது சரிதான், அவர் என்னுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், நான் மாற வேண்டும்.
நான் டேவை எப்படி நடத்தினேனோ அதே போல கடவுளையும் நடத்தினேன் என்பதை விரைவில் கண்டுபிடித்தேன். நான் பேசி முடித்த பின், அவர் கேட்பார் என்று எதிர்பார்த்தேன். நான் கடவுளிடமிருந்து கேட்கவில்லை என்று புகார் செய்தேன், ஆனால் உண்மை என்னவென்றால், நான் அவரிடமிருந்து கேட்க நேரம் ஒதுக்கவில்லை. இன்றைய வசனம் அமைதியாக இருக்கவும், கடவுள் நமக்கு ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது. நம்மில் பலர் இதைச் செய்ய கடினமாக உணருகிறோம். ஏனென்றால் நம்முடைய மாம்சம் பிஸியாக மற்றும் சுறுசுறுப்பாக காரியங்களைச் செய்ய விரும்புகிறது, ஆனால் நாம் கடவுளின் சத்தத்தைக் கேட்க விரும்பினால் தனியாக நேரத்தை செலவிடவும், அமைதியாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பலருக்கு, பிறர் சொல்வதைக் கேட்கும் திறனை பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. சில சமயங்களில் எதுவும் பேசாமல் கடவுளின் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருப்பதை இது குறிக்கிறது. நாம் கேட்க பழக வேண்டும்! இதைச் செய்வதற்கான ஒரு வழி, நீங்கள் ஊக்குவிக்க அல்லது ஆசீர்வதிக்க விரும்பும் நபர் யாராவது இருக்கிறார்களா என்று கடவுளிடம் கேட்ட பின்னர் அமைதியாக இருந்து அவர் சொல்வதைக் கேளுங்கள். அவர் எவ்வளவு விரைவாக பதிலளிக்கிறார் என்பதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்களை ஊக்குவிக்க நீங்கள் செய்யக்கூடிய குறிப்பிட்ட விஷயங்களை, அவர் உங்களுக்கு கொடுக்கலாம். நாம் கடவுளுடைய வழிநடத்துதலைக் கேட்கும் போது, நாம் ஒருபோதும் சிந்திக்காத, ஆக்கபூர்வமான யோசனைகளை அவர் நமக்குத் தருகிறார். அமைதியாக இருக்க நேரம் ஒதுக்குங்கள், கவனமாகக் கேளுங்கள், பிறகு கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குக் காட்டுவதைச் செய்யுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: இன்று நேரத்தை ஒதுக்குங்கள். அமைதியாக இருந்து கேளுங்கள்.