
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16)
பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. அது நாம் அவரை விட்டு வெகு தொலைவில் இருப்பதை உணர வைக்கிறது; அது நம்மை அவருடைய பார்வையிலிருந்து ஒளிந்து கொள்ள வைக்கிறது அல்லது அவருடன் பேசுவதற்கான விருப்பத்தை எடுத்துப் போடுகிறது; மேலும் அது அவருடைய சத்தத்தைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுக்கும். நாம் பாவம் செய்திருக்கிறோம் என்று தெரிந்தால், தேவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், பின்னர் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும், ஏனென்றால் நாம் மனந்திரும்பும்போது அவர் நம்மை மன்னிப்பதாக வாக்களித்திருக்கிறார். மறைக்கப்பட்ட காரியங்கள் நம்மீது அதிகாரம் செலுத்தலாம், எனவே இன்றைய வசனத்தின்படி, நம் பாவங்களை மற்றவர்களிடம் ஒப்புக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒருவரிடம் நம் தவறுகளை ஒப்புக்கொண்டு, ஜெபம் செய்யக் கேட்பதற்கு முதலில் நாம் உண்மையிலேயே நம்பும் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும், இரண்டாவதாக நம் பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது பிரச்சினைகளை பணிவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அதை ஒரு சவாலாகக் கண்டால், மனத்தாழ்மையில் வளர உதவுமாறு தேவனிடம் கேளுங்கள், ஏனெனில் நீங்கள் நம்பக்கூடிய ஒரு நண்பரைக் கண்டால், முடிவுகள் ஆச்சரியமாக இருக்கும், மேலும் அந்த நபருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், “நான் இந்த பகுதியில் போராடுகிறேன், நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். நான் வேதனைப்படுகிறேன், நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும்.”
ஒருமுறை ஒரு நண்பரின் மீது பொறாமை கொண்டதனால், ஒரு உண்மையான போராட்டம் எனக்கு இருந்தது நினைவிருக்கிறது. நான் ஜெபித்தேன், ஆனால் பொறாமையால் இன்னும் வேதனைப்பட்டேன், அதனால் நான் அதை டேவிடம் ஒப்புக்கொண்டேன், எனக்காக ஜெபிக்கும்படி அவரிடம் கேட்டேன். அதை திறந்த வெளியில் சொன்னது, என் மீதான அதன் சக்தியை உடைத்தது, அதிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன். எப்போதும் முதலில் தேவனிடம் செல்லுங்கள், ஆனால் உங்களுக்கு ஒரு நண்பர் அல்லது ஆவிக்குறிய தலைவரின் உதவி தேவைப்பட்டால், பெருமை உங்கள் வழியில் நிற்க வேண்டாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்களுக்குத் தேவைப்படும்போது, மற்றவர்களிடம் வாக்குமூலம் கொடுப்பதிலிருந்து, பெருமை உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள்.