அற்ப காரியங்களை கவனி

“ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.” – 1 தெச 5:11

நான் ஒரு நாள், ஒரு அலுவலக கட்டடத்திற்குள்ளாக சென்று கொண்டிருந்தேன். கதவினருகே நின்று கொண்டிருந்த ஒருவர் கதவை எனக்காக திறந்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு, பார்த்து புன்முறுவல் செய்தேன். அவர், நான் கதவைத் திறந்து விட்ட ஐந்தாவது நபர் நீங்கள் ஆனால் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்த முதல் நபர் நீங்கள், எனக்கு நன்றி சொன்ன இரண்டாம் நபர் நீங்கள் என்று சொன்னார்.

நான் புன்முறுவலோடு இரண்டாம் தரம் அவருக்கு நன்றி செலுத்தினேன். பின்னர் நான் முன்பின் அறியாதவருக்காக கதவைத் திறக்கும் ஒரு எளிய அற்ப காரியத்தில் கூட நாம் எவ்வளவாக உரிமை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தேன்.

பிறர் நமக்கு பெரிய காரியங்களை செய்யும் போது அவர்களைப் பாராட்டுகிறோம். ஆனால் எவ்வளவு தரம் அற்ப காரியங்களைப் பாராட்டுகிறோம்?

ஓருவர் உங்களுக்கொரு நல்ல காரியம் செய்து நீங்கள் அவருக்கு நன்றி சொல்லும் போது அது அவர்களை கட்டுகிறது, உற்சாகப்படுத்துகிறது. அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்த அந்த மனிதரைப் போன்று  இருப்பவர்களுக்கு அது மிகப் பெரிய காரியமாயிருக்கிறது.

இன்று உங்கள் பேருந்து சரியான நேரத்திற்கு வந்ததா? அப்படியென்றால் ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தீர்களா? கடந்த முறை உணவகத்திலே உணவு உண்ட போது கேட்காமலேயே உங்கள் தேனீர் குப்பியை இரண்டாந்தரமும் நிரப்பிய உதவியாளருக்கு நன்றி செலுத்தினீர்களா? நான் சொல்ல விரும்புவது இது தான். உங்கள் வாழ்விலிருப்பவர்களிடமும் ஒரு நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்

தேவனே, மக்கள் எனக்கு செய்யும் சின்ன உதவிகளை நான் கவனிக்கும் படி என்னை உணர்வுள்ளவனாக்கும். நான் நன்றியில்லாதவனாக இருக்க விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை கட்ட விரும்புகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon