“அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.” – யோவாண் 16:23-24
எங்களுடைய இளைய குமாரன் பள்ளியிலே படித்துக் கொண்டிருந்த பொழுது, நானும் டேவும் பிரயாணப்பட வேண்டியிருந்த்ததால் அவனுடன் தங்கியிருப்பவர்கள், நாங்கள் இல்லாத போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவனுக்கு தேவைப்படும் போது மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உரிமை அளிக்கும், சட்டரீதியான ஆவணத்திலே நாங்கள் கையொப்பம் இட்டுக் கொடுக்க வேண்டும். அவனுக்காக எங்கள் ஸ்தானத்திலே இருந்து தீர்மாணம் எடுப்பதற்காய்.
அப்படியாகவே, இயேசு தம் சீஷர்களுக்கும் செய்தார். அவரை நம்பும் அனைவருக்காகவும் செய்தார். அவர், தம் நாமத்தை உபயோகிக்கும் பொழுது பதிலளிப்பார் என்றார். அவருடைய நாமத்தினாலே இத்தகைய அதிகாரம் தான் உங்களுக்கும் எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவருடைய நாமம் அவருடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது. அவருடைய நாமம் அவரை பிரதிபலிக்கிறது. நாம் அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கும் பொழுது அது அவரே ஜெபிப்பதைப் போன்றது. இந்த சிலாக்கியம் நம்புவதற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது! ஆனால் நாம் இதை நம்பலாம். ஏனென்றால் இதை உறுதி செய்ய வேத வாக்கியங்கள் இருக்கின்றன. எனவே இயேசுவின் நாமத்தை உபயோகித்து தீமையை மேற்கொண்டு தேவனுடைய ஆசீர்வாதங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வர அதன் வல்லமையை கிரியைக்குட்படுத்துங்கள்.
ஜெபம்
தேவனே, நீர் செவிசாய்க்கிறீரென்றும், பதிலளிக்க ஆயத்தமாயிருக்கிறீரென்றும் அறிந்தவளாக, இயேசுவின் நாமத்தினாலே தைரியமாக ஜெபிக்கின்றேன். உம்முடைய குமாரனுடைய நாமத்தை உபயோகித்து, ஜெபிக்க கொடுத்திருக்கும் அற்புதமான சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.