“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” – யோவாண் 15:7
அனேக கிறிஸ்தவர்களுக்கு வேதத்தை வாசிக்க வேண்டியதின் அவசியம் தெரியும். ஆனால் அனேகருக்கு வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டியதின் அவசியமும், வார்த்தை அவைகளுக்குள் நிலைத்திருக்க வேண்டியதின் அவசியத்தையும் அறியாதிருக்கிறார்கள்.
நாம் வார்த்தையைப் படித்து அதை நம் மனதிலே வைத்திருக்க ஜாக்கிரதையாக இருக்கும் போது, நமக்கு தேவைப்படும் போதெல்லாம் வேத வசனத்தை உபயோகிக்கலாம். நமக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ அவற்றையெல்லாம் ஜெபத்திலே கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று இயேசு வாக்களித்திருக்கிறார்.
நாம் வார்த்தையிலே நிலைத்திருப்பதும், வார்த்தை நமக்குள்ளே நிலைத்திருக்க அனுமதிப்பதும் நம்மை இயேசுவின் உண்மையான சீஷனாக மாற்றுகிறது. (யோவாண் 8:31). அது நம் ஜெப ஜீவியத்திலே அதிக வல்லமையை கொடுக்கின்றது. ஜெபத்திலே வல்லமையை கொண்டிருப்பது சத்துருவின் மேல் வல்லமையை கொடுக்கின்றது.
தேவனுடைய வார்த்தையிலே நீங்கள் நிலைத்திருக்கிறீர்களா? அது உங்களுக்குள்ளே நிலைத்திருக்க அனுமதிக்கின்றீர்களா? இதற்கான பதில் ‘இல்லை’ என்றால் நீங்கள் அதற்கேற்ற படி செயல்பட உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
தேவனுடைய வார்த்தையை வாசிப்பதையும், படிப்பதையும் முன்னுரிமைப்படுத்துங்கள். வசனங்களை மனனம் செய்து அவைகளை உங்கள் இருதயங்களிலே வைத்து வையுங்கள். பின்னர் வாழ்க்கையின் போராட்டங்களை நீங்கள் எதிர் கொள்ளும் போது போரை ஜெயிக்க நீங்கள் ஆயத்தமுள்ளவர்களாகவும், ஆயுதமணிந்தவர்களாகவும் இருப்பீர்கள்.
ஜெபம்
தேவனே, நான் உண்மையான சீஷனாக இருந்து, உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருப்பதால் வரும் வல்லமையிலே நடக்க விரும்புகிறேன். நான் ஜாக்கிரதையாக உம்முடைய வார்த்தையைப் படித்து உமது சத்தியத்தை என் இருதயத்தின் ஆழத்திலே வைக்க, என்னை நடத்துவீராக.