“அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.” – கொலோ 1:17
கொலோ 1:17 பிரமிக்கத்தக்க வசனமாகும். அது ‘இயேசு எல்லாவற்றையும்’ தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறாரென்று சொல்லுகிறது. இதை உணராதவர்களும் கூட அவரால் தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.
யோசித்துப் பாருங்கள், இயேசு மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையெனில் நமக்கு நல்ல திருமணங்கள் இருக்காது. இயேசு நம் தனிப்பட்ட உறவுகளை வளர்க்காவிட்டால் நமக்கு நல்ல உறவுகள் இருக்காது. இயேசு இல்லாமல் நம் பொருளாதாரம் குழம்பி கிடக்கும். அவரில்லாமல் நம் மனமும், உணர்ச்சிகளும் உடைந்து போயிருக்கும். எல்லாமே குழப்பமாக இருந்திருக்கும்.
இயேசு மட்டும் நம் வாழ்வின் முக்கியமானவராக இல்லாமல் இருப்பாரேயாயின், நாம் நம் முன்னுறிமைகளை மாற்றியமைக்க வேண்டும். மத் 6:33, தேவனுடைய இராஜ்ஜியத்தை நாம் முதலாவது தேட வேண்டுமென்று சொல்கிறது. ஏனென்றால் நாம் முதல் காரியங்களை முதலாவதாக வைக்கா விட்டால் மற்ற எல்லா காரியங்களும் ஒழுக்கக் கேடாகி நமக்கு பிரச்சினையாகி விடும்.
அவர் எப்படி காரியங்கள் நடைபெற விரும்புகிறார், மக்களை எப்படி நடத்துகிறார், சூழ்னிலைகளில் எப்படி நடந்து கொள்வது, பணத்தை எப்படி செலவிடுவது, எத்தகைய மன நிலையை கொண்டிருப்பது என்பதைக் கண்டு பிடிப்பதே அவரது வழியின் படி இருப்பது, செய்வது, அவரது இராஜ்ஜியத்தை தேடுவதாகும்.
உங்கள் வாழ்க்கையில் அவருக்கு முன்னுறிமை கொடுப்பதற்கு இன்றே தொடங்குங்கள். அவர் உங்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்….அவரைப் பின்பற்றும் படி உங்களை சிருஷ்டித்தார். உங்கள் வாழ்விலே அவரை முதலாவதாக வையுங்கள்.
ஜெபம்
தேவனே, நீரின்றி நான் ஒன்றும் இல்லை. நீரே என்னை தாங்குகின்றீர்…உண்மையிலேயே நீர் எல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்கின்றீர். என் வாழ்விலே நீர் மிகவும் முக்கியமானவர். உம்மை நான் முதலாவதாக வைக்கிறேன்.