
“நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.” – சங்கீதம் 89:14
தேவன் நீதியுள்ளவராக இருக்கிறார். அது அவரது தண்மை. நாமும் அதைப் பின்பற்ற வேண்டுமென விரும்புகிறார். நீதியானது தவறான காரியங்களை சரியாக்குகிறது. இந்த உலகிலே நம்மை சுற்றியிருக்கும் அநியாயங்களை முகவர்களாகிய நம்மூலமாய் சரியாக்குகின்றார். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று தவறாக இருப்பதை நாம் பார்க்கும் போது நம் முதல் பிரதிக் கிரியை அதற்கு ஜெபிக்கிறதாக இருக்க வேண்டும். நம் அடுத்த பிரதிக்கிரியை நாம் அதற்காக என்ன செய்ய முடியும்? என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றிலும் நாம் பார்க்கும் தேவைகள் நம்மை மேற்கொண்டு விடுவதைப் போன்று உணர்வது சுலபமானதே. எனவே நாம் அவைகளைப் பார்த்து அது வேறொருவருடைய பிரச்சினை என்று நினைக்கிறோம். அவர்களே அதை சரிபடுத்தட்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் இதையும் அதையும் செய்யட்டும் என்று விரும்புகிறோம்.
அவர்கள் என்பவர் யார் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா? ‘அவர்கள்’ என்பவர்கள் நாம் தான். நீங்களும் நானும் தான். எல்லாவற்றையும் தீர்க்க உங்களால் இயலாமலிருக்கலாம், ஆனால் ஏதோவொன்றை நீங்கள் செய்யலாமே. நான் அநியாயத்தைப் பார்த்தும் எதுவும் செய்யாமலிருக்க மாட்டேன். தேவன் உங்களை செயலாற்றாமலிருக்கவும், மந்தமாக இருக்கவும் சிருஷ்டிக்கவில்லை. நீங்கள் என்ன செய்யக்கூடும் என்று அவரிடம் நீங்கள் கேட்க விரும்புகிறார். அவர் உங்களை உற்சாகத்திற்கென்றும், வைராக்கியத்திற்கென்றும், வாஞ்சைக்கென்றும் சிருஷ்டித்திருக்கிறார். அவருடைய மகிமைக்கென்றும், பிறருக்கு உதவும் படியும் அவர் உங்களுக்குள்ளே வரங்களை வைத்திருக்கிறார். எனவே நீதியுள்ள வாழ்வை இன்றே வாழ்வீர்களாக.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, இந்த உலகிலே இருக்கும் அநியாயத்தைப் பற்றி என்னால் ஏதாவது செய்ய இயலும் படி இருக்கையிலே ‘அவர்கள்’ ஏதாவது செய்யட்டும் என்று உட்கார்ந்து கொண்டு இருக்க என்னை அனுமதிக்காதீர். தைரியத்தால் என்னை நிரப்பி, இந்த உலகிலே என்னை சுற்றிலும் நடக்கும் தவறுகளை எப்படி சரியாக்குவது என்பதைக் காட்டுவீராக.