அவர் மூலமாக அனைத்தையும் அணுகுவது

அவர் மூலமாக அனைத்தையும் அணுகுவது

அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். (ரோமர் 5:2)

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், எல்லாமே தேவன் மீதான நமது தனிப்பட்ட விசுவாசம் மற்றும் அவருடனான நமது தனிப்பட்ட உறவைப் பொறுத்தது, அதில் நிச்சயமாக அவருடைய சத்தத்தைக் கேட்பதும் அடங்கும். இயேசுவின் சிலுவை மரணம், நம்முடைய பரலோகத் தகப்பனை தடையின்றி அணுகுவதற்கு உதவுவதாலும், அவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதை, நம்முடைய விசுவாசம் சாத்தியமாக்குவதாலும், அவருடனான உறவை நாம் அனுபவிக்க முடியும்.

எபேசியர் 3:12 எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அதை தியானித்து வருகிறேன். அந்த வசனம் சொல்கிறது: “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.” இந்த வசனத்தை நான் தியானித்தபோது, சாதாரண மனிதர்களாகிய நாம் ஜெபத்தின் மூலம் எந்த நேரத்திலும் கடவுளை அணுகுவதற்கான இலவச அணுமதியைப் பெற்றிருப்பதை உணர்ந்து மிகவும் உற்சாகமடைந்தேன். நாம் எப்போது வேண்டுமானாலும் அல்லது தேவைப்படும் போதெல்லாம் அவருடைய சத்தத்தைக் கேட்கலாம். எந்த இடர்பாடும் இல்லாமல், அச்சமின்றி, முழு சுதந்திரத்துடன் நாம் அவரைத் தைரியமாக அணுகலாம். அது எவ்வளவு அருமையானது! தேவன் மீதான தனிப்பட்ட நம்பிக்கை, அவரிடமிருந்து வரம்பற்ற உதவி மற்றும் அவருடன் தடையற்ற தொடர்புக்கான கதவைத் திறக்கிறது.

அவர் உங்களை நேசிக்கிறார், உங்கள் ஐக்கியத்தை விரும்புகிறார், உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறார், அவர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் வாருங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளிடமிருந்து கேட்கவும், அவருடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படவும் நாம் எதிர்பார்க்கலாம்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon