
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். (சங்கீதம் 112:1, 7)
கடவுள் சில சமயங்களில் நம் இருதயத்தில் ஆழமாக அமைதியைக் கொடுப்பதன் மூலம் பேசுகிறார். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும், உங்களிடம் கடவுளை நம்புங்கள், சமாதானமாக இருங்கள் என்று சொல்லும் சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம், ஆனால் “எப்படி” என்பது உங்களுக்கு தெரிவதில்லை. பயம் உங்களிடம் கத்துகிறது, உங்களை பயமுறுத்துகிறது மற்றும் உங்களை அச்சுறுத்துகிறது. நண்பர்கள் சொல்கிறார்கள், “எல்லாம் சரியாகிவிடும்”, ஆனால் கடவுள் ” நீங்கள் என்னை நம்பலாம்; இதை நான் பார்த்துக் கொள்கிறேன். உண்மையில் எல்லாம் சரியாகிவிடும்.” என்று உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பேசும் வரை நீங்கள் நம்புவது கடினம்.
1989-ல் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றேன். அவர் என்னில் வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோயைக் கண்டுபிடித்தார், உடனடியாக அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தார்.
இந்தச் செய்தியின் விளைவாக, நான் மிகுந்த பயத்துடன் போராடினேன். எனக்கு தூக்கம் வரவில்லை. மேலும் பயம் என்னை மிகவும் கடுமையாக தாக்கிய நேரங்களும் உண்டு. நான் கீழே விழப் போவது போல் உணர்ந்தேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் எத்தனை பேர் என்னைச் சமாதானப்படுத்தினாலும், நான் அதிகமான பயத்துடன் போராடினேன். ஒரு நாள் அதிகாலை, சுமார் 3:00 மணி இருக்கும், கடவுள் என் இருதயத்தில் ஆழமாகப் பேசினார், “ஜாய்ஸ், நீ என்னை நம்பலாம்” என்று கூறினார், ஆனால் அதுவரை பயத்துடன் போராடினேன்.
அதன் பிறகு, எனக்கு மீண்டும் எந்த விதமான பயமும் ஏற்படவில்லை. சோதனைகளின் முடிவுகளுக்காக நான் காத்திருந்தபோது, நான் கலக்கமடைந்தேன், ஆனால் நான் பயப்படவில்லை. நான் கடவுளின் கையில் இருப்பதை அறிந்தேன், என்ன நடந்தாலும் அவர் என்னை கவனித்துக் கொள்வார்.
அது முடிந்தவுடன், எனக்கு மேலும் சிகிச்சை தேவையில்லை என்று சொன்னார்கள். நான் பயப்படுவதற்குப் பதிலாக நன்றியுடன் இருந்தேன்—தேவனுடைய சத்தத்தைக் கேட்க நாம் கற்றுக்கொண்டால் எந்தச் சூழ்நிலையிலும் அது போலவே நடக்கும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளை நம்புங்கள். அவர் உங்களை வீழ்த்த மாட்டார்.