கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. (2 கொரிந்தியர் 3:17)
இந்தப் புத்தகத்தில் இருக்கும் நியாயப்பிரமாண காரியங்களைக் குறித்து நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும், அது கடவுளிடம் இருந்து கேட்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக நான் நம்புவதால், அதை இன்னும் விரிவாகக் கூற விரும்புகிறேன்.
நாம் கடவுளின் ஆவியால் வழிநடத்தப்படாவிட்டால், மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. மேலும் நாம் ஆவியானவரால் வழிநடத்தப்படும் அதே நேரத்தில், நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ முடியாது. ஒரு நியாயப்பிரமாண மனநிலையானது, எல்லோரும் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக, எல்லா நேரத்திலும் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் கடவுளின் ஆவியானவர் நம்மை தனித்தனியாகவும், பெரும்பாலும் தனிப்பட்ட, ஆக்கப்பூர்வமான வழிகளிலும் வழிநடத்துகிறார்.
கடவுளின் எழுதப்பட்ட வார்த்தை அனைவருக்கும் ஒரே விஷயத்தைச் சொல்கிறது, அது தனிப்பட்ட விளக்கம் அல்ல (பார்க்க 2 பேதுரு 1:20). அதாவது, கடவுளுடைய வார்த்தை ஒருவருக்கு ஒரு விஷயத்தையும் மற்றவர்களுக்கு வேறு ஒன்றையும் சொல்வதில்லை. இருப்பினும், பரிசுத்த ஆவியானவரின் நேரடி தலைமை, ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்லது ஒரு நபரின் வாழ்க்கையில், உடல்நலப் பிரச்சினையின் காரணமாக சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்க கடவுள் வழிநடத்தலாம். அதற்கு சர்க்கரையை யாரும் சாப்பிட கூடாது என்று அர்த்தமல்ல. நியாயப்பிரமாணத்தின் வழி நடப்பவர்கள், கடவுளுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு அதை ஒரு பிரமாணமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
இயேசு பிறந்த சமயத்தில், வேதபாரகர்களும், பரிசேயர்களும் பத்துக் கட்டளைகளை மக்கள் பின்பற்றுவதற்காய், அவற்றை இரண்டாயிரம் விதிகளாக மாற்றியதாக ஒருமுறை கேள்விப்பட்டேன். அத்தகைய சட்டத்தின் கீழ் வாழ முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள். அது அடிமைத்தனம்!
சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க இயேசு வந்தார். நாம் எதைச் செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய நமக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் நியாயப்பிரமாணத்தின் பிடியிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம். இப்போது பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தும் அனைத்து வழிகளிலும் அவரைப் பின்பற்ற சுதந்திரமாக இருக்கிறோம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவதைவதையும், வழிநடத்துவதையும் நம்புங்கள்.