உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபிரெயர் 13:17)
நமது நவீன சமுதாயம் முற்றிலும் கலகத்தால் நிரம்பியுள்ளது. மேலும் கலகம் கடவுளிடம் கேட்பதிலிருந்து நம்மைத் தடுக்கிறது. பலருக்கு அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை நான் அவதானித்துள்ளேன். இது திருமணங்கள், குடும்பங்கள், பள்ளிகள், வணிகங்கள், குடிமைச் செயல்பாடுகள் மற்றும் நமது கலாச்சாரம் முழுவதும் இருக்கிறது. ஆவிக்குறிய அதிகாரத்திற்கு அடிபணிதல் நடைமுறையில் இல்லை.
பெரும்பாலும் ஒரு போதகர், சில வகையான திருத்தங்களைக் கொண்டு வர முயலும்போது, மக்கள் கோபமடைந்து தேவாலயத்தை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் – அது சரியல்ல. பவுல் மக்களை அடிக்கடி திருத்தினார்; அது ஒரு ஆவிக்குறிய தலைவராக அவரது பணியின் ஒரு பகுதியாக இருந்தது. அது இன்று ஆவிக்குறிய தலைவர்களுக்கு ஒரு பொறுப்பாக உள்ளது. பவுல் சொன்னார்: “எங்களுக்கு [உங்கள் மீது] அதிகாரம் இருக்கிறது என்பதல்ல … உங்கள் மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்காக நாங்கள் உங்களுடன் சக வேலையாட்களாக உழைக்கிறோம்” (2 கொரிந்தியர் 1:24). நம் மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கு ஆவிக்குறிய அதிகாரம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொண்டு அதை நம்பினால், நாம் அதை ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு செய்யும்போது, நமது மகிழ்ச்சி அதிகரிக்கும் – மேலும் கடவுளின் சத்தத்தைக் கேட்கும் திறனும் அதிகரிக்கும்.
2 தெசலோனிக்கேயர் 2:7-8 இன் படி, இன்று உலகில் செயல்படும் கிளர்ச்சியின் ஆவி அந்திக்கிறிஸ்துவின் ஆவியாகும். இது யாருக்கும் அடிபணியத் தயாராக இல்லை. இன்று மக்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதாகக் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் பெரும்பாலும் எல்லா அதிகாரத்தையும் எதிர்க்கிறார்கள். தங்கள் சொந்த உரிமையையும் எதிர்க்கிறார்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கர்த்தருக்கு ஒரு சேவையாக, அதிகாரத்திற்கு அடிபணியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்து செழிக்கச் செய்வார்.