ஆவியில், வார்த்தையோடு

ஆவியில், வார்த்தையோடு

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். (சங்கீதம் 119:169)

நாம் எந்த வகையான ஜெபத்தை ஜெபித்தாலும்—அது பரிசுத்தப்படுத்துதல் அல்லது அர்ப்பணிப்பு, விண்ணப்பம் அல்லது விடாமுயற்சி, பரிந்துரை அல்லது உடன்படிக்கை, துதி, ஆராதனை அல்லது நன்றி செலுத்துதல் ஆகியவற்றின் ஜெபமாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தை இன்றியமையாத பொருளாகும். நாம் தேவனுடைய வார்த்தையை நினைவுபடுத்தும் போதும், அவர் பேசியதை அவர் நிறைவேற்ற முடியும் என்று விசுவாசத்துடன் ஜெபிக்கும் போதும் நம்முடைய ஜெபங்கள் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் பயனுள்ளதாக இருக்க, ஜெபம் “ஆவியில்” இருக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன்.

நமது ஆவிக்குரிய வாழ்வில் சமநிலையாகவும், வலுவாகவும் இருக்க, நம்முடைய ஜெபங்களில் வார்த்தை மற்றும் ஆவியானவர் இரண்டும் தேவை. மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை நாடினால் அல்லது ஆவிக்குறிய காரியங்களில் மிகவும் அதிகமாக ஈடுபடும் போது, அவர்கள் ஏமாற்றமடைந்து மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். அதே சமயம், நாம் ஆவியானவருக்கு உணர்திறன் இல்லாமல், வெறும் வார்த்தையில் கவனம் செலுத்தினால், நாம் நியாயப்பிரமாணத்தில் வாழ்பவர்கள் போல் ஆகலாம். நம் ஆவியும், வார்த்தையும் ஒன்றாக இருக்கும் போது, நாம் சமநிலையான-சத்தியத்தின் அடித்தளமாகி, மகிழ்ச்சி மற்றும் வல்லமையுடன் கூடிய திடமான வாழ்க்கையை வாழ முடியும். தேவனுடைய வார்த்தையின் உறுதியான அடித்தளம் நமக்குத் தேவை, ஆவியின் உற்சாகம் நமக்குத் தேவை. வார்த்தைக்கு இசைவாக ஜெபிப்பதும், ஆவியில் ஜெபிப்பதும் தேவனுடைய சித்தத்தின்படி நம்மை ஜெபிக்க வைக்கிறது. இது நமது பிரார்த்தனைகளை பயனுள்ளதாக்குகிறது மற்றும் நம் வாழ்வில் பெரும் பலனைத் தருகிறது. நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் ஜெபங்களை வார்த்தையால் நிரப்பவும், பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் அற்புதமான முடிவுகளைக் காண்பீர்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடைய வார்த்தை ஆவியின் வாள்; அது சாத்தானுக்கு எதிரான உங்கள் ஆயுதம். அதை அதிக திறனோடு பயன்படுத்தவும்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon