இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்

நீங்கள் கேட்காததால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். – யாக்கோபு 4:2

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அடுத்து வரும் வாக்கியம் என் வாழ்க்கையையே மாற்றியது  நீங்கள் தேவனிடம் கேட்காமல் இருக்கிறதால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். இந்த  சிறிய வசனம் இடைவிடாமல் ஜெபிக்கும், வாழ்க்கையையே மாற்றும் வல்லமையை கண்டறியும் கதவை திறந்துவிட்டது.

அச்சமயம்  என் வாழ்விலே,  அனேக காரியங்களை பற்றிய மன அழுத்தத்திற்குள் இருந்தேன்.  என்னுடைய ஊழியம் வளர முயற்சித்து கொண்டு இருந்தேன். என் கணவர் இதையோ, அதையோ  செய்ய வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தேன். என் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட பிரகாரம் நடந்துகொள்ள வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தேன். நான் விரும்பிய காரியங்களை பிறர் செய்ய முயற்சித்து கொண்டிருந்தேன். நானே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தேன். நீங்கள் நினைத்தது போல் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

முயன்று தோற்று விரக்தியடைந்த இளம் கிறிஸ்தவளாக,  என்னுடைய சொந்த பெலத்திலே வாழ்வதென்பது பயனற்றது என்பதை உணர்ந்தேன்.  என் பிரச்சனைகளை தேவனிடம் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில், நான் அதிகம் ஜெபிக்க வேண்டியிருந்தது!

நாம் தேவனுடைய அன்பையும் அவர் நமக்காக கொண்டிருக்கும் திட்டத்தையும் விளங்கி கொள்ளும்போது அவர் நமக்காக திறந்து கொடுக்க விரும்பும் கதவுகளை நாம் உணர்ந்து கொள்ள தொடங்குவோம். ஆனால் நாம் அவருடன் விடாமல் சம்பாஷித்து கொண்டிருக்கும் போதும், அவருடைய சத்தத்தை கேட்டுக்கொண்டும் அவருடனான நம் உறவிலே ஆழமாக வளர்ந்து கொண்டிருக்கும்போது தான் இவற்றை அறிந்து கொள்வோம்.

மத்தேயு 7:7 – ல் இயேசு, தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருங்கள்,  அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள்,  அப்போது கண்டடைவீர்கள், தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள் அப்போது திறக்கப்படும் என்று கூறுகிறார்.

அனேக சமயங்களிலே,  நாம்,  நம் கயிற்றின் முனைக்கு வரும்போது தான் ஜெபிக்க தொடங்குகின்றோம்.  ஆனால் நம் ஜெபங்கள் எல்லாம் உடனடியாக பதில் அளிக்கப்படாமல் இருக்கும்போது, நான் தொடராமல் விட்டு விடுகின்றோம்.  இன்று நான்,  நீங்கள் ஜெபிக்க மட்டுமன்றி, இடைவிடாமல் ஜெபிக்க உற்சாகப் படுத்துகின்றேன். நீங்கள் நினைக்கும்படி காரியங்களை நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் ஜெபிக்கும்போது அவற்றையெல்லாம் தேவனிடம் கொடுத்து விடுங்கள்.

நாம் அவரைத் தேடினால்,  அவரை கண்டு கொள்வோம் என்று அவர் வாக்களித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  நாம் நம் முழு இருதயத்தோடும் அவரிடம் ஜெபிப்போம்,  தேடுவோம்.

ஜெபம்

தேவனே,  என் பிரச்சனைகளை உம்மிடம் கொண்டு வர எனக்கு நினைவு படுத்தும்.  என்னுடைய சொந்த பெலத்திலே வாழ்ந்து களைத்து போயிருக்கிறேன்.  எனக்கு உம்முடைய வழிநடத்துதல் தேவை. அனுதினமும் நான் உம்மை தேடுகையில் என் நம்பிக்கையை உம் மீது வைக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon