கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். (சங்கீதம் 27:4)
நாம் தேவனிடமிருந்து கேட்க விரும்பினால், அவரைத் தேடுவது நம் வாழ்வில் முதன்மையானதாக இருக்க வேண்டும். இன்றைய வசனத்தில், வாழ்க்கையின் ஒரு முக்கிய தேவையை தாவீது சுருக்கமாகக் கூறியுள்ளார். அவருக்கு வாழ்க்கையில் ஒரு முக்கியத் தேவையாக கடவுளுடைய பிரசன்னம் இருந்தது.
தாவீது தான் வெற்றி பெறவும், நம்பிக்கையைப் பெறவும் பல வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். தேவனுடைய பிரசன்னத்தால் பெலனடைந்திருந்த அவர், ஒரு கவன்கல் மற்றும் ஐந்து சிறிய கற்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமலேயே, ஒரு பெரிய ராட்சனைக் கொன்றார். அவர், தன் குடும்பத்தின் இளைய சகோதரராக இருந்தாலும் கூட, இந்த எளிய மேய்ப்பனை இஸ்ரவேலின் ராஜாவாக கடவுள் தேர்ந்தெடுத்தார், அவரது புகழும், செல்வமும் திருப்தியைத் தரும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கும் அனைத்தையும் அவருக்கு வழங்கியது.
பல வழிகளில் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவித்த பிறகும் கூட, தாவீது கொண்டிருந்த அதிகப்படியான கடவுளின் நாட்டம், நாம் எத்தனை வெற்றிகளை அனுபவித்திருந்தாலும், கடவுளைத் தேடுவதைத் தொடர வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தாவீது கூட கடவுளை இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியிருந்தது.
பலர் தேவனிடமிருந்து வழிகாட்டுதலை விரும்புகிறார்கள், ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்பதற்காக அவர்கள் மற்ற விஷயங்களை ஒதுக்கி வைக்க விரும்பவில்லை. ஆனால் தாவீது தான் விரும்பிய அனைத்தையும் ஒரே ஒரு விஷயமாக சுருக்கிக்கொண்டார்—அவரது வாழ்நாளின் எல்லா நாட்களும் கடவுளைப் பற்றியது என்பதே. நேற்றைய தினத்தை விட இன்று தேவனை மிக நெருக்கமாக அறிந்துகொள்வதே, நமக்குள் இருக்கும் ஏக்கத்தை உண்மையிலேயே திருப்திப்படுத்தும் ஒரே விஷயம் என்று நான் நம்புகிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்றும், ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் “கடவுளைப் பற்றிக் கொண்டு அவரை அதிகம் தொடருங்கள்”.