
“அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.” – 1 கொரி 15:45
இயேசுவின் இரத்தம் என்ற இந்த கருத்தானது சிலரை குழப்படைய செய்கின்றது. ஆனால் ஒரு சரியான விளங்கிக் கொள்ளுதல் இல்லாத படி விசுவாசிகள் அதன் வல்லமையை உரித்தாக்கிக் கொள்ள இயலாது. ஆதாம் பாவம் செய்த போது அவனுடைய பாவம் தலைமுறை தலைமுறையாக வந்தது. தாவீது இந்த உண்மையை சங்கீதம் 51:5லே அங்கீகரிக்கிறார். இதோ நான் அக்கிரமத்திலே பிறந்தேன். என் தாய் என்னை பாவத்திலே கர்ப்பந்தரித்தாள்.
இயேசு மனித குலத்தை மீட்க வந்தார். நம் விடுதலையை சம்பாதித்து நம் ஆதி நிலைக்கு நம்மை நிலை நாட்டவே வந்தார். பாவமுள்ள இரத்தத்தோடு அவர் எப்படியாக அப்படி செய்ய இயலும்?.
1 கொரி 15:45லே, இயேசு இரண்டாம் ஆதாம் என்று குறிப்படுகிறார். அவர் மனிதன் மூலமாக அல்ல, தேவன் மூலமாக பிறந்ததால் அவரின் இரத்தத்திலே ஜீவன் இருந்தது. அதை சரியாக உபயோகிக்கும் போது, பாவத்தின் மூலமாக நம்மிலே கிரியை செய்யும் சாவை, அந்த இரத்தத்திலிருக்கும் ஜீவனனாது மேற்கொண்டு ஜெயம் பெறும்.
நம்முடைய அந்த அதிகார ஸ்தானத்தை தேவன் நமக்கு மீண்டுமாக கொடுக்க விரும்புகிறார். ஏற்கனவே அவர் அதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டார். அவர் அந்த ஒப்பந்தத்திற்கு முத்திரையும் வைத்து விட்டார் என்று கூட சொல்லலாம். கிரயம் முழுமையாக கொடுக்கப்பட்டாகி விட்டது. இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்ற கிரயத்தால் வாங்கப்பட்டு விட்டோம்.
ஜெபம்
தேவனே, இயேசுவின் இரத்தததாலே நான் மீட்கப்பட்டு, விடுதலையாக்கப்பட்டு விட்டேன். நான் பாவத்திற்குள்ளாக பிறந்திருந்தாலும், இயேசுவின் இரத்தமானது என்னை கழுவி விட்டது. நன்றி ஆண்டவரே.