
“ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” – பிலி 2:9-11
அனேகர், கிறிஸ்தவர்கள் உட்பட – இயேசுவின் நாமத்திலிருக்கும் மிகப்பெரிய வல்லமையைப் பற்றி அறியாதவர்களாயிருக்கின்றனர்.
ஓரு பெயரின் முக்கியத்துவத்தைப் பற்றி எப்போதாவது எண்ணிப்பார்த்த்துண்டா? ஒருவருடைய பெயர் அவரையும், அவரது குணாதசியத்தையும் மற்றவரிடமிருந்து வேறு பிரித்துக் காட்டுகிறது. நாம் ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது அந்த நபரைப் பற்றி நாம் ஒன்றை அறிவிக்கின்றோம்.
அதே போல, இயேசுவின் நாமத்தை நாம் சொல்லும் போது நாம் ஒரு பெயரை மட்டுமே பற்றி பேசுகிறதில்லை. வல்லமையின் உருவமாக இருக்கும் – மனித வல்லமை அல்ல தேவனுடைய எல்லா வல்லமையும், அதிகாரத்தின் உருவமாக இருக்கும் அந்த நாமத்தை அறிக்கையிடுகிறோம் (கொரி 2:9-10).
நாம் அந்த நாமத்தை பேசும் போது, அந்த நபரை விவரிக்கின்றோம். இயேசு என்றால் இரட்சகர். அவர் நமக்காக என்ன செய்கின்றாரோ அதற்கேற்ப அவரை அழைக்கின்றோம். நம் பாவங்களினின்று அவர் நம்மை இரட்சிக்கின்றார். நம் தோல்விகளினின்றும், அவரது சித்தத்திலிராத சூழ்னிலைகளிருந்தும் நம்மை இரட்சிக்கிறார் (மத் 1:21).
ஆனேகர் ஆவிக்குறிய வல்லமையை அனுபவிக்க விரும்புகின்றனர். ஆனால் அதை கட்டவிழ்த்து விட இயேசுவின் நாமத்தை விசுவாசத்தோடு சொல்ல வேண்டும் என்பதை அறியாமலிருக்கின்றனர். விசுவாசிக்கிறவர்களுக்கு அந்த அற்புதமான பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தேவனுடைய பிள்ளையாக விசுவாசத்தோடு அவருடைய நாமத்தை சொல்லுங்கள்.
ஜெபம்
பிதாவாகிய கர்த்தரே, என் வாழ்விலுள்ள ஒவ்வொரு சூழ்னிலையின் மேலும் உம்முடைய நாமத்தை விசுவாசத்தோடு அறிக்கையிடுகிறேன். உமது குமாரனுடைய இரட்சிக்கும் வல்லமைக்காக உமக்கு நன்றி.