“என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.” – எபி 2:9
இயேசு நமக்காக மரணத்தை ருசித்தாரென்று வேதம் சொல்கிறது. எனவே நீங்களும் நானும் நித்திய மரணத்தை அனுபவிக்க வேண்டாம். ஏனென்றால் அவர் நம் பாவங்களுக்கான அபராதத்தை ஏற்கனவே செலுத்தி விட்டு, நித்திய ஜீவனை பரிசாக கொடுத்திருக்கிறார். இது நாம் சந்தோசப்படக்கூடிய ஒன்றாகும்.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலும், சிலுவையின் மீது பெற்ற வெற்றியினாலும் கிறிஸ்துவிலே நமக்கு இருக்கும் வெற்றியை வாழ்ந்து காட்ட ஒவ்வொரு காலை பொழுதும் ஒரு புதிய தருணமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் காலையிலே தங்கள் கால்களை தரையிலே வைக்கும் போது நரகம் நடுங்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நாம் எழுந்து விட்டோம் என்று பிசாசுகள் உணர்ந்ததால் நடுங்க வேண்டும்!
அப்படியாகத்தான் கிறிஸ்துவுக்குள் நாம் யாராக இருக்கின்றோம் என்றும், அவருக்குள் நமக்கிருக்கும் அதிகாரத்தை நாம் விளங்கிக் கொள்ளும் போதும், பிசாசுகள் நடுங்கும். நாம் தேவனுடைய சேனையிலே போர் வீர்ர்கள், அவருக்குள் நமக்கு அதிகாரம் உண்டு!
இயேசு பாவத்தையும் மரணத்தையும் வென்றிருக்கிறார். இப்போது அவர் நமக்கு அளிக்கும் அதிகாரத்திலும், வெற்றியிலும் நாம் தொடர்ந்து வாழ வேண்டும். அப்போதுதான் எதிரிக்கு நாம் மிகவும் அபாயகரமானவர்களாகி விடுவோம்.
ஜெபம்
தேவனே, உமக்குள் எனக்கிருக்கிற வெற்றிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு நாளும் நீர் எனக்காக வைத்திருக்கிற எல்லா அதிகாரத்திலும், வெற்றியிலும் நான் நடக்கும் படி நீர் எனக்காக செலுத்தின கிரயத்தை நான் மேன்மேலும் விளங்கிக் கொள்ள எனக்கு உதவுவீராக.