
“அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.” – யோவாண் 3:18
நிராகரிப்பால் ஏற்பட்ட கடந்த கால வலிகளிலிருந்து தம் மக்களை குணப்படுத்த கடவுள் விரும்புகிறார். அவர் உங்களை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் மத்தேயு 11:28-ல் கூறுகிறார், வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். இது பரிபூரணமாக இருக்க முயற்சித்து பின்னர் தோல்வியுற்றதால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சிகளால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொண்டிருக்கிறவர்களைக் குறிக்கிறது.
யோவான் 3:18 ல், பரிசேயரின் சட்டங்களின் படி வாழ முயற்சிக்கும் மக்களுடன் இயேசு பேசிக் கொண்டிருந்தார். பரிசேயரை மகிழ்விப்பது மிகவும் கடினம். அப்படிப்பட்டவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒருவர் உங்களிடம், “நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டு என்னைப் பிரியப்படுத்தினால் நான் உங்களை ஏற்றுக்கொள்கிறேன். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் நான் உங்களை நிராகரிப்பேன், நேசிக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.
இயேசு ஒரு பரிசேயர் அல்ல. தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் புறம்பே தள்ள மாட்டேன் என்று யோவான் 3:18 ல் அவர் கூறுகிறார். அவரை நம்புங்கள், அவரை நேசியுங்கள், அவரைப் பற்றிக் கொள்ளுங்கள், அவரை சார்ந்திருங்கள், நம்புங்கள். அவர் உங்களுக்கு அளிக்கும் பரிபூரணமான வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குள்ளாக நீங்கள் உண்மையிலேயே நுழைய முடியும்.
ஜெபம்
தேவனே, என்னை நேசித்ததற்கும் எப்போதும் என்னை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. நான் உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன், உம்மை சார்ந்திருக்கிறேன்.