“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.” – யாக் 4:8
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வசனத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நாம் பாவம் செய்கிறதை நிறுத்துகிறதற்கு முன்பு தேவனிடமாக கிட்டி சேர வேண்டுமென்று சொல்கிறது.
அனேகர் இதை தலைகீழாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை முதலில் மேற்கொள்ள முயன்று கொண்டிருப்பதால், அவர்கள் தேவனிடம் வர இயலாத, ஒருபோதும் ஒரு உறவைக் கொண்டிருக்க இயலாத கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அவருடன் ஒரு உறவைக் கொண்டிருக்க போதுமான அளவு நல்லவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக, அவர்கள் தங்களிலுள்ள காரியங்களை சரியாக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது தவறாகும். இயேசு வந்ததற்கான காரணம் என்னவென்றால், அவரில்லாமல் ஒருபோதும் நம்மால் நல்லவர்களாக இருக்க இயலாது. நாம் நம் வாழ்விலே கண்டிப்பாக இயேசுவைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய மரணம், சிந்திய இரத்தம் நம் பாவங்களுக்காக கிரயமாக செலுத்தப்பட்டது. நாம் கொண்டிருந்த கடனை செலுத்தியது.
இயேசுவின் நாம்த்தின் மூலமாக அவரண்டை கிட்டி சேரும் வரை நம்முடைய பாவங்களினின்று நாம் சுத்திகரிக்கப்பட வேறெந்த வழியும் இல்லை. இன்று நீங்கள் அவரிடமாக கிட்டி சேர வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நீங்கள் முதலாவது உங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அந்த பொய்யை நம்பிக் கொண்டு தூரமாக நில்லாதேயுங்கள். மாறாக தேவனிடம் சென்று உங்களுக்காக இயேசு செய்த தியாகத்தின் மூலமாக அவர் உங்களை சுத்திகரிப்பாராக.
ஜெபம்
தேவனே, என்னுடைய பாவத்தை சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்தின் மூலமாக நான் உம்மண்டை வருகிறேன். உம்முடைய மன்னிப்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் வெட்கத்திலே வாழ மறுக்கிறேன். ஏனென்றால் நான் இப்போது உம்மண்டை நெருங்கி வந்து உம் அன்பையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ளலாமென்று அறிந்திருக்கிறேன்.