உங்களின் சந்திப்புக்கான அழைப்பைக் கொண்டிருங்கள்

உங்களின் சந்திப்புக்கான அழைப்பைக் கொண்டிருங்கள்

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். (எரேமியா 29:13)

கடவுளைப் பற்றிய அறிவில் நம்மை வளரவிடாமல் தடுக்க முயற்சிக்கும் செயலற்ற மனப்பான்மையை எதிர்த்து நாம் நம் மாம்சத்துடன் கடுமையாக போராட வேண்டியிருக்கலாம். கடவுளுடன் நேரத்தை செலவிடுவது என்பது நாம் செய்யும் உண்மையான அர்ப்பணிப்பாகும்.

சிறுநீரக நோயின் காரணமாக எனக்கு டயாலிசிஸ் தேவைப்பட்டால், வாரத்திற்கு இரண்டு முறை காலை 8:00 மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தால், அந்தச் சமயங்களில், அது எவ்வளவு கவர்ச்சியாகத் தோன்றினாலும், எவ்வளவு முக்கியமானதாகத் தோன்றினாலும், வேறு எதையும் செய்யும் படியான அழைப்பை, நான் நிச்சயமாக ஏற்கமாட்டேன். டயாலிசிஸ் செய்வதைப் பொறுத்து என் வாழ்நாள் இருந்தது என்பதை நான் அறிவேன். நாம் கடவுளோடு இருக்கும் நேரத்தைப் பற்றியும் அவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் அவருடன் செலவழிக்கும் நேரத்தால், நமது வாழ்க்கையின் தரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே நமது அட்டவணையில், அவருடனான நேரத்திற்கு முன்னுரிமை இருக்க வேண்டும்.

சில சமயங்களில் நாம் கடவுளுடன், நமது சந்திப்புகளைக் கடைப்பிடிப்பதில் மந்தமாகிவிடுகிறோம். ஏனென்றால் அவர் எப்போதும் கிடைக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார் என்பது நமக்குத் தெரியும். எனவே நாம் அவருடன் நேரத்தைத் தவிர்க்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம். அதனால் அவசரமாகத் தோன்றும் ஒன்றைச் செய்யலாம். நாம் கடவுளுடன் அதிக “நேரத்தை” செலவிட்டால், நம் நேரத்தை கொள்ளையடிக்கும் பல “அவசர” சூழ்நிலைகள் நமக்கு இருக்காது.

நாம் தேவனுடன் நேரத்தை செலவிடும்போது, அவருடைய பிரசன்னத்தை உணராவிட்டாலும் அல்லது நாம் எதையாவது ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம் என்று நினைக்காவிட்டாலும், நாம் நல்ல விதைகளையே விதைக்கிறோம். அது நம் வாழ்வில் நல்ல அறுவடையை விளைவிக்கும். நீங்கள் விடாமுயற்சியுடன், கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ளும் நிலையை அடைவீர்கள். அப்பொழுது நீங்கள் அவருடன் ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அவருடன் பேசுகிறீர்கள், அவருடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: அவரை சந்தித்து, அவரிடம் பேசுவதை உங்கள் பட்டியலில் வைத்திருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon