உங்களுக்காக யாரோ ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்

உங்களுக்காக யாரோ ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்

நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. (யோவான் 17:9)

இயேசு நமக்காக ஜெபிக்கிறார் என்பது நமக்குத் தெரியும். லூக்கா 22:32ல் பேதுருவிடம், “உனக்காக நான் விசேஷமாக ஜெபித்தேன்” என்று கூறுகிறார். இன்றைய வசனத்தில், அவர் தம் சீஷர்களைப் பற்றி, “நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன்” என்று கூறுகிறார். மேலும் யோவான் 17ல், அவர் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார், “இவர்களுக்காக மட்டும் நான் ஜெபிக்கவில்லை, ஆனால் என்னில் விசுவாசம் வைப்பவர்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன்”, அதாவது நீங்களும் நானும்.

ஒரு பரிந்துரையாளர் என்ன செய்வார்? கடவுளுக்கும், ஒரு தனிநபருக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நின்று, ஒரு பரிந்துரையாளர் மற்றவர்களுக்காக ஜெபிக்கிறார். கடவுளுக்கும், நமக்கும் இடையே ஒரு இடைவெளி உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் அவரைப் போல புனிதமானவர்கள் அல்ல, ஆனால் இயேசு அங்கே இருக்கிறார். அப்படிப்பட்ட இடைவெளியில் நின்று, கடவுளையும், என்னையும்-அல்லது கடவுளையும், உங்களையும்-ஒன்றாகக் கொண்டுவருகிறார். அதனால் நாம் அவருடன் ஐக்கியம் கொள்ள முடியும். மேலும் அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்க முடியும். நம்முடைய இருதயங்கள் சரியாக இருக்கும் வரையிலும், நாம் இயேசுவை விசுவாசிக்கும் வரையிலும், நாம் செய்யும் ஒவ்வொரு சரியில்லாத காரியத்தையும், அவர் இடைமறித்து, சரிசெய்வார், கவனித்துக்கொள்வார் என்பதை அறிவது அருமையாக இருக்கிறது அல்லவா? உங்கள் சார்பாக கடவுளின் சிம்மாசனத்தின் முன், இயேசு நின்று உங்களுக்காக ஜெபிப்பதை நீங்கள் கற்பனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அப்படி செய்யும் போது, உங்களுக்காக அவருடைய பரிந்துரையின் மூலம் உங்கள் குறைபாடுகள் தீர்க்கப்படும் என்று நீங்கள் நம்பலாம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இயேசு உங்களுக்காக ஜெபிக்கிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon