“நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” – பிலி 1:6
தேவன் உங்கள் வாழ்க்கைக்கென்று ஒரு பரிபூரணமான திட்டத்தைக் கொண்டிருக்கிறார்!. நாமனைவரும் இந்த கூற்றை கேட்டிருக்கிறோம். ஆனால் நம்மில் அனேகர் இதை உண்மையாகவே நம்புவதில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை ‘பரிபூரணம்’ என்ற வார்த்தை நம்மை கலங்கப் பண்ணுகிறது. ஒருவரும் பரிபூரணரல்ல. பரிபூரணமாய் இருக்க வேண்டுமென்ற எண்ணமானது நம் வாழ்க்கையிலே மன அழுத்த்த்தை ஏற்படுத்துகிறது.
பரிபூரணம் முடியாததாய் காணப்படுகிறது. ஏன் தெரியுமா? அது அப்படித்தான்.
நாம் பரிபூரணராயிருப்பதால் தேவனுடைய திட்டமானது பரிபூரணமாயிருக்கிறதில்லை. அந்த திட்டம் பரிபூரணமானது, ஏனென்றால் தேவனே அதை வடிவமைத்தார். பரிபூரணத்தண்மை அவரிடமிருந்து வருகிறது. அவர் மட்டுமே பரிபூரணர். நாம் நம்மை அறிந்திருப்பதை விட அவர் நம்மை நன்றாய் அறிந்திருக்கிறார். நம் வாழ்க்கைக்கென்று வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு செயல் திட்டத்தை அவர் நிறைவேற்றுவார்.
பவுல் பிலி 1:6லே, தேவன் நம்மை இரட்சித்து, நம்மிலே ஒரு புதிய வேலையை தொடங்கியிருக்கிறார். நம்மில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலையானது முழுமை பெறும்.
தேவன் நம்மில் கிரியை செய்து கொண்டிருக்கிறாரென்பதை நாம் நினைத்துப் பார்க்கும் போது நாம் எவ்வளவு பரிபூரணமற்றவராக இருக்கிறோம், ஆனால் தேவன் எவ்வளவு பரிபூரணராக இருக்கிறார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தேவனுடைய பரிபூரணத்தண்மையை பூர்த்தி செய்ய நாம் செய்யும் எதுவும் போதுமானதாக இராது. இயேசு மட்டுமே பரிபூரணர். அவர் மட்டும் தான் போதுமானவர். நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தேவனுடைய பரிபூரண திட்டம் நம்மாலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஜெபம்
அன்பான ஆண்டவரே, நான் பரிபூரணமானவள் இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். எனக்கான உம்முடைய திட்டம் என்னுடைய பரிபூரணத்திலல்ல, உம்முடைய பரிபூரணத்தை சார்ந்திருக்கிறது. அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். என்னுள் ஒரு புதிய கிரியையை நீர் செய்து கொண்டிருக்கிறதற்காக உமக்கு நன்றி. அதை நிறைவேற்ற உம்மையே நம்புகிறேன்.