“இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.” – மாற்கு 10:27
எத்தனை திறமை வாய்ந்தவர்கள் ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. தேவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் திறமைகள்/ வரங்களை உபயோகிக்க, ஒரு அடி கூட எடுப்பதில்லை. ஏனென்றால் முதலாவதாக அவர்களுக்கு அந்த வரம் இருக்கிறது என்பதை அவர்கள் நம்புவதில்லை. அவர்களில் நீங்களும் ஒருவரா?
உண்மை என்னவெனில் தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வரங்களையும், ஈவுகளையும், தாலந்துகளையும், திறமைகளையும் கொடுத்திருக்கிறார். உங்களுக்காக அவர் பெரிய திட்டங்களை கொண்டிருக்கிறார். அவரது இராஜ்ஜியத்திற்காக பெரிய காரியங்களை செய்ய உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் உங்களை பார்க்கும் வண்ணம் நீங்கள் உங்களைப் பார்த்து, உங்களுடைய ஈவுகளை உபயோகிக்க அவர் உங்களுக்கு உதவ அவரை நம்பும் வரைக்கும், தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் திறமைக்கேற்ப உங்களால் வாழ இயலாது.
நீங்கள் சுயமதிப்பு இல்லாமலும், மோசமான சுய பிம்பத்தோடும் மன தைரியம் இன்றி போராடிக்கொண்டு இருப்பீர்கள் என்றால், தேவன் உங்களை ஆச்சரியமான திறமைகளுடன் சிருஷ்டித்திருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் தேவனை நம்பும் போதும், உங்களால் செய்ய இயலும் என்று அவர் சொல்வது அனைத்தையும் உங்களால் செய்ய இயலும் என்று நம்பும் போதும், அவர் உங்கள் வாழ்க்கைக்கென்று கொண்டிருப்பதை நிறைவேற்றுவீர்கள்.
‘எல்லாம் கூடும்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் மீது நீங்கள் உங்கள் நம்பிக்கையை வைக்கும்போது உங்கள் திறமைகளுக்கு ஏற்ப உங்களால் வாழ இயலும்.
ஜெபம்
தேவனே, என்னை உம் கண்களின் வழியாக காண எனக்கு உதவும். நீர் எனக்கு கொடுத்திருக்கும் ஈவுகள், தாலந்துகளுடன் காண எனக்கு உதவும். நீர் பெரிய தேவனாக இருப்பதால், என்னையும் பெரிய திறமைகளுடன் சிருஷ்டித்திருக்கிறீர் என்று நம்புகிறேன். இன்று நான் என் நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். உம்மால் எல்லாம் கூடும் என்று நம்புகிறேன்!