ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)
மன்னிக்காத தன்மை, கசப்பு, மனக்கசப்பு அல்லது மற்ற எந்த விதமான தவறும், கடவுளிடம் இருந்து நம்மைக் கேட்க முடியாமல் செய்யலாம். இந்த விஷயத்தில் கடவுளுடைய வார்த்தை மிகவும் தெளிவாக உள்ளது. கடவுள் நம்முடைய பாவங்களையும், குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமெனில், மற்றவர்கள் நமக்கு எதிராக செய்த குற்றங்களை நாம் மன்னிக்க வேண்டும்.
எபேசியர் 4:30-32, இன்றைய வசனத்தை உள்ளடக்கிய பகுதியில், கோபம், வெறுப்பு மற்றும் பகைமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை நம் இருயங்களில் வைத்திருக்கும்போது, நாம் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துகிறோம் என்று போதிக்கிறது. எக்காரணம் கொண்டும் எவருக்கும் எதிராக நாம் மன்னிக்காமல் இருந்தால், அது நம் இருதயத்தைக் கடினப்படுத்துகிறது. நம் வாழ்வில் கடவுளின் வழிநடத்துதலுக்கு ஒப்புக் கொடுப்பதைத் தடுக்கிறது.
மன்னிக்காமல் இருப்பது, விஷம் குடித்துவிட்டு உங்கள் எதிரி இறந்துவிடுவார் என்று நம்புவது போன்றது என்று ஒருமுறை யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருவேளை அவருடைய அல்லது அவளுடைய வாழ்க்கையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அல்லது நீங்கள் வருத்தப்படுவதைக் கூட பொருட்படுத்தாத ஒருவரிடம், உங்கள் வாழ்க்கையை ஏன் கோபமாகவும், கசப்பாகவும் செலவிடுகிறீர்கள்? நீங்களே உங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள் – உங்களை காயப்படுத்தியவர்களை மன்னியுங்கள்! மன்னிக்கும் பரிசை நீங்களே கொடுங்கள். இது உங்கள் இருதயத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவரும் மற்றும் கடவுளின் சத்தத்தைக் கேட்கவும், உங்கள் வாழ்க்கையில் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றவும் உதவும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: மற்றவர்களை மன்னிக்கும் வரத்தை நீங்களே உங்களுக்கு கொடுங்கள்.