“நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” – ஏசா 43:25
உங்களுடன் உங்களுக்கு ஒரு உறவு இருக்கிறது என்பதைப் பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா? நீங்கள் அதை ஒருபோதும் அதிகம் சிந்தித்திருக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் வேறு எவரையும் விட உங்களுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள். மேலும் உங்களுடன் நீங்கள் நன்றாக இருப்பது மிக முக்கியம், ஏனென்றால் நீங்கள் விட்டு விட்டு செல்லாத ஒரு நபர் நீங்கள் தான்.
நாம் நம்மை நேசிக்க வேண்டும், சுயநலமின்றி, சுயநலத்துடன் அல்ல. ஆனால் ஒரு சம நிலையான, சுயத்தை சார்ந்த, சுயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கை முறையில் அல்ல. ஆனால் ஒரு சம நிலையான, தேவனுடைய சிருஷ்டிகளெல்லாம் நல்லதாகவும், சரியாகவும் இருக்கிறதென்பதை உறுதிபடுத்தும் தேவனுக்கேற்ற வழியிலே நேசிக்க வேண்டும். யாரும் பரிபூரணமானவர்கள் அல்ல. நாம் கடந்து வந்த துரதிர்ஷ்டவசமான அனுபவங்களால் குறைபாடுடையவர்களாக இருக்கலாம், ஆனால் நாம் பயனற்றவர்கள், ஒன்றிற்கும் உதவாதவர்கள் என்று அர்த்தமாகாது.
“தேவன் என்னை நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும், எனவே கடவுள் நேசிக்கத் தேர்ந்தெடுப்பதை நான் நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். நான் செய்யும் எல்லாவற்றையும் நான் நேசிக்கவில்லை, ஆனால் கடவுள் என்னை ஏற்றுக்கொள்வதால் நான் என்னை ஏற்றுக்கொள்கிறேன்”.
“கடவுள் என்னை தினமும் மாற்றுகிறார் என்று நான் நம்புகிறேன், ஆனால் இந்தச் செயல்பாட்டின் போது, கடவுள் எற்றுக் கொள்வதை செய்வதை நான் நிராகரிக்க மாட்டேன்”… நான் எப்போதுமே இப்படி இருக்க மாட்டேன் என்பதை அறிந்து, நான் இப்போதே என்னை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லக்கூடிய முதிர்ந்த அன்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜெபம்
ஏசாயா 43:25 சொல்வது போல், தேவனே, நீர் என் பாவங்களை நீக்கி என்னை ஏற்றுக்கொள்கிறீர். அப்படியென்றால் நான் என்னை நிராகரிக்க வேண்டியதில்லை. நீர் என்னை நேசிப்பதால் நான் என்னை ஒரு ஆரோக்கியமான முறையில் நேசிக்க விடுதலை பெற்றிருக்கிறேன்!