“ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.” – மத் 12:37
உங்களைப் பற்றி எதிர்மறையான விஷயங்களை ஒருபோதும் சொல்லவோ, சிந்திக்கவோ கூடாது. நான் ஒருபோதும் சரியாகச் செய்ய மாட்டேன். நான் ஒருபோதும் மாற மாட்டேன். நான் அசிங்கமாக இருக்கிறேன். நான் பயங்கரமாக இருக்கிறேன். நான் முட்டாள். யார் என்னை நேசிக்க முடியும்? என்பது போன்ற காரியங்களை சொல்லாதீர்கள், நினைக்காதீர்கள். மத்தேயு 12:37 கூறுகிறது, உங்கள் வார்த்தைகளால் நீங்கள் நியாயப்படுத்தப்படுவீர்கள்…
உங்கள் வார்த்தைகளால் நீங்கள் கண்டிக்கப்படுவீர்கள், தண்டிக்கப்படுவீர்கள்.
நீதிமொழிகள் 23:7 கூறுகிறது, அவன் நினைவுகளின் படியே, அவனும் இருக்கிறான்…. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நம்மைப் பற்றி பேசும் மற்றும் சிந்திக்கும் விதம், நம்மைப் பற்றி நாம் எப்படி உணருகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கையை பாதிக்கிறது.
உங்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, உங்களைப் பற்றி (தனிப்பட்ட அறிக்கைகளாக) நீங்கள் பேச வேண்டும். எனவே நீங்கள் கிறிஸ்துவில் யார் என்பதில் நம்பிக்கை வைத்திருக்க முடியும். உதாரணமாக: “நான் கிறிஸ்துவில் தேவனுடைய நீதியாயிருக்கிறேன். கிறிஸ்துவில் நான் ஏற்றுக்கொள்ளப்படுகிறேன். தேவன் என்னை தம்முடைய சொந்த கைகளால் உருவாக்கினார், கடவுள் தவறு செய்கிறவரல்ல.”
நான் ஒவ்வொரு நாளும் நேர்மறையான, வேதத்தை சார்ந்த அறிக்கைகள் செய்வதின் மூலம் அந்த நாளைத் தொடங்க விரும்புகிறேன். நீங்கள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வீட்டை சுத்தம் செய்யும் போது இதைச் செய்யலாம். கண்ணாடியில் பார்த்து சத்தமாக, “கடவுள் என்னை நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார், நானும் அவ்வாறே செய்கிறேன்” என்று சொல்ல நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் உங்களைப் பற்றி தேவனுக்கேற்ற, நேர்மறையான உண்மையைப் பேசத் தொடங்கும் போது, கடவுள் உங்களை உருவாக்கியது போலவே நீங்கள் இருப்பீர்கள்.
ஜெபம்
தேவனே, என்னைப் பற்றி எதிர்மறையான காரியங்களை பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன். நீர் என்னை நேசிக்கிறீர், என்னை ஏற்றுக்கொள்கிறீர் என்ற உண்மையை நான் அறிக்கையிடுகிறேன். என்னை நீர் எப்படியெல்லாம் இருக்க சிருஷ்டித்தீரோ அப்படியெல்லாம் என்னால் இருக்க இயலும்.