“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” – எபி 4:13
ஒருமுறை ஒருவர் என்னிடம் நான் எப்படி என்னை அழுத்தும் கடந்த காலத்தினின்று விடுபட்டு வாழ்கிறேன் என்று கேட்டார். என்னுடைய பதில் மிக எளிமையானதே. என்னைப் பற்றிய உண்மையை எதிர் கொள்ள தேவன் எனக்கு கிருபையையும், விருப்பத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதே.
நான் ஒரு கோபமான, நிலையற்ற சூழ்னிலையிலே வளர்ந்தேன். விரைவிலேயே கோப்பபடக்கூடியவளாக, அனேக சமயங்களிலே அதற்காய் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி இருந்ததால், மன சோர்வுற்றவளாக, ஏமாற்றமடைந்தவளாக வளர்ந்தேன். என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கலாமே என்று ஆசைப்பட்டேன். ஆனால் என் ஆசை, விருப்பம் எதுவுமே தீரவில்லை. என்னுடைய மோசமான குடும்ப பின்ன்னியிலே, என்னுடைய பிரச்சினகளை கூறிக்கொண்டு என் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தேன்.
இறுதியாக என் கடந்த காலத்திலே எனக்கு என்ன ஏற்பட்டதோ அதற்கு நான் பொறுப்பு இல்லையென்றும், என்னுடைய கடந்த காலத்தை என்னால் மாற்ற இயலாது என்பதையும், நான் விருப்பப்பட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, நான் முன்னோக்கி செல்கையிலே நான் எப்படி வாழ்கிறேன் என்பதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தேவன் எனக்கு உணர்த்தினார்.
நான் பிறரையும், என் சூழ்னிலைகளையும் குறை கூறாமல், எனக்கு நானே சாக்கு போக்கு சொல்வதை நிறுத்த வேண்டியிருந்தது. அவ்வாறாக நான் செய்து என் வாழ்க்கையை மறுசீரமைக்க நான் தேவனை நம்பிய பொழுது, நான் மாறினேன். இப்போது எனக்கு சமாதானம் இருக்கிறது. என் வாழ்க்கையை நான் அனுபவிக்கிறேன்.
நீங்களும் கூட இத்தகைய சூழ்னிலையில் இருக்கலாம். உங்களைப் பற்றிய உண்மையை எதிர் நோக்குவது பயங்கரமானதாக இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் தனியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய எல்லா குறைகளும் தேவனுக்கு தெரியும். அவருடைய கண்ணோட்டத்திற்காக அவரை கேட்பீர்களென்றால், அவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் எழும்பி பொறுப்பேற்று ஒரு சமாதானமான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவுவார். இன்று உங்களைப் பற்றிய உண்மையைப் பார்க்க அஞ்சாதீர். தேவன் உங்களை ஒரு புதிய நாளுக்குள்ளாக நடத்துவார்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என்னைப் பற்றிய உண்மையை நான் அறிந்து கொள்ள உம் உதவி எனக்கு வேண்டும். ஆண்டவரே, என் கடந்த காலத்திலிருந்த பிரச்சினைகளின் மேலும், பிறர் மீது பழியைப் போடுவதையும் நிறுத்தி விட்டு, உம்முடைய வார்த்தையின் வல்லமையால் அவற்றை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் பொறுப்பேற்றுக் கொண்டு என்னை மாற்றிக் கொள்ள எனக்கு உதவுவீராக.