“ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.” – கலா 6:3
வேதம் மீண்டும் மீண்டுமாக நம்மை பெருமைக்கு எதிராக எச்சரிக்கிறது. பெருமையின் அபாயத்தை என்னால் போதுமான அளவு வலியுறுத்தி சொல்ல இயலாது. பாருங்கள், நாம் பெருமைக்குள்ளாகும் போது, எதிரிக்கு நம்மீது மிகப்பெரிய அளவிளான தாக்கத்தை ஏற்படுத்த அனுமதி அளிக்கிறோம்.
நாம் நம்மைப் பற்றி மிக அதிகமாக என்ணிக் கொள்ளும் போது அது, நாம் பிறரை குறைவாக மதிப்பிடும் படி செய்கின்றது. தேவனை நம்ப மறக்க செய்கின்றது, தேவனின்றி ஒன்றுமே இல்லை என்ற சத்தியத்தை புறக்கணிக்க செய்கின்றது.
இத்தகைய மனப்பான்மையோ, எண்ணமோ தேவனுக்கு அருவருப்பானது. பெருமையைப் பற்றி நமக்கொரு பயம் வேண்டும். தேவன் நம்மை நேசிக்கிறதாலும், நம்மை மன்னித்திருப்பதாலும் தான், நாம் விஷேசமானவர்களாகவும், மதிக்கப்படத்தக்கவர்களாகவும் இருக்கிறோமென்றும், நாமாகவே பெரிய காரியங்களை செய்ததால் அல்லவென்றும் நினைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எப்போதெல்லாம் ஒரு பகுதியிலே சிறந்தவர்களாகின்றோமோ, அது, அதை செய்ய தேவன் நமக்களித்திருக்கும் கிருபையின் வரத்தினாலேதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நம் பெலத்தினாலே பெரிய காரியங்களை நிறைவேற்றி விட்டோம் என்று எண்ணும் அந்த நொடிப்பொழுதில் தானே நாம் பெருமைக்குள்ளாகி விடுகிறோம்.
நாம் தேவனுக்குரியவர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். நம்மைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நாம் தேவனுடைய மேண்மையையும், நம் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பையும் கவனிப்போம். நாம் எதை செய்ய வேண்டுமென்று அவர் அழைக்கிறாரோ அதை அவருடைய கிருபையால் மட்டுமே வெற்றியுடன் செய்து முடிக்க இயலும்.
ஜெபம்
தேவனே, என் வாழ்வில் இருக்கும் எந்தவொரு நண்மையும் உம்மிடத்திலிருந்து தான் வருகிறது. நான் வெற்றி சிறக்கும் போது அது உம்முடைய கிருபையாலும், நண்மையாலுமே என்று அறிந்தவளாக உமக்கு முன் என்னை தாழ்த்தி, நான் பிடித்துக் கொண்டிருக்கும் பெருமைக்காக மனந்திரும்புகிறேன்.