“இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” – மத் 5:45
ஒருவர் கடவுளிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவதை பார்த்து, அதைப் பெற்றுக் கொள்ள அவர்கள் தகுதியற்றவர்கள் என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உங்களை காயப்படுத்திய ஒருவருக்கு நல்ல விஷயங்கள் நடப்பதை நீங்கள் பார்த்தீர்களா?
உங்களை புண்படுத்திய ஒருவருக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைக்கும்போது, அது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம் …எப்படி மன்னிப்பது என்பதை நான் கற்றுக் கொள்ளும் வரை எனக்கும் அப்படித்தான் இருந்தது.
நீதிமான்களுக்கும், அநீதியானவர்களுக்கும் நல்ல காரியங்களும், கெட்ட காரியங்களும் நடக்கும் என்று வேதம் சொல்கிறது. உங்களை காயப்படுத்திய ஒருவர் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, அவர்களை மன்னிப்பது இன்னும் கடினமானது, ஆனால் அவர்களுக்காக ஜெபிக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
உங்களைப் புண்படுத்திய மக்களை நினைத்து, மனக்காயப்பட்டுக் கொண்டோ அல்லது எரிச்சல் அடைந்து கொண்டோ இருந்தால் அவர்களுக்காக ஜெபிப்பதின் மூலம் அவர்களை ஆசீர்வதிக்க நான் இன்று உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். உங்களை காயப்படுத்தியவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் செய்யும் தேர்வு அது. மன்னிப்பு என்பது உங்கள் முடிவை அடிப்படையாகக் கொண்டது – உணர்வை அல்ல. ஆனால் அதில் உங்களுக்கு குணமடைதல் இருக்கிறது.
மன்னிக்கும் வாழ்க்கை முறை நீங்கள் கிறிஸ்துவைப் போல ஆக உதவுகிறது. மன்னிப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் கற்றுக் கொண்டு, உங்களைத் துன்புறுத்தியவர்களின் ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கத் தொடங்கும் போது, உங்கள் இருதயம் கசப்பிலிருந்து குணமடையும், உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி, கடவுள் உங்களுக்காக திட்டமிட்ட ஆசீர்வாதங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
ஜெபம்
கடவுளே, அது கடினமாக இருக்கலாம், ஆனால் என்னை காயப்படுத்தியவர்களுக்காக நான் ஜெபிக்க வேண்டும், ஆசீர்வதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். மன்னிப்பு என்பது ஒரு தெரிந்து கொள்ளும் செயல் என்பதை நான் உணர்கிறேன். எனவே நான் மன்னிக்கத் தேர்வு செய்யும்போது எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.