“உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.” – நீதி 3:9-10
அநேகர் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் தங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுக்க விரும்புவதில்லை. உண்மை என்னவெனில் நாம் தேவன் மேல் நோக்கமாய் இருக்கவும், அவர் நம் இருதயத்திலே போடும் அனைத்தையும் கொடுக்கவும், செய்யவும் நாம் அனைவருமே அடிக்கடி நம் வாழ்வையும், இருதயங்களில் நிலையையும் மதிப்பிட்டுக் கொள்வது நல்லது. நாம் கொடுக்கிறவர்களாக இருக்க, நம் நேரத்தையும், பணத்தையும் தேவனுடைய பணியிலே முதலீடு செய்யவும், நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டிய சமயங்கள் நமக்கு இருக்கும்.
பயமான எண்ணங்களால் நீங்கள் கொடுக்காமல் இருக்கும் படி சாத்தான் உங்களிடம் பேசுவதை அனுமதிக்காதீர்கள். தேவனே நம் தேவைகளை அறிந்து இருப்பதாலும், நம்மை பராமரித்து கொள்வதாக வாக்களித்திருப்பதாலும், எதை குறித்தும் கவலைப்படாமல் இருக்க இயேசு நம்மை ஊக்கப்படுத்துகிறார் (மத்தேயு 6:25-34).
நீதி 3:9-10 சொல்கிறது, உங்களுடைய எல்லா முதலீட்டாலும், நீதியான உழைப்பால் ஏற்படும் நிறைவினாலும், உன் வருமானத்தின் முதற்பலனாலும் தேவனை கனப்படுத்து. அதனால் உன்னுடைய களஞ்சியங்கள் அபரிதத்தால் நிறைந்திருக்கும். உன் துருத்திகள் திராட்சை ரசத்தால் பொங்கிவழியும். உங்கள் அனைத்தையும் தேவனுக்கு கொடுக்கும் போது உங்களை கரிசனையாக காத்துக் கொள்ள அவர் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார்.
தேவனிடம் உங்களையே கொடுத்து விடுங்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ உங்கள் அனைத்து கனவுகளையும், தரிசனங்களையும், நம்பிக்கைகளையும், வாஞ்சைகளையும் தேவனிடம் கொடுத்துவிடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையின் மூலமாக தம்முடைய வல்லமையை செயல்படுவார்.
ஜெபம்
கர்த்தாவே, இன்று என்னுடைய அனைத்தையும் உம்மிடம் கொடுக்கின்றேன். என் கைகளையும், வாயையும், மனதையும், சரீரத்தையும், நேரத்தையும் கொடுக்கின்றேன். நான் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்தும் உம்முடையது. இன்று நான் உம்முடைய சித்தத்தை செய்ய விரும்புகிறேன்.