“உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.” – மத் 5:43-44
‘ஏல் சிட்’ என்ற திரைப்படம் எனக்கு பிடித்தமானது. ஸ்பெயின் நாட்டை இனைத்து மாவீரணாக மாறிய ஒரு மனிதனின் கதை. பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் மூர்களுக்கு எதிராக போரிட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்தனர். போரிலே ஏல் சிம் ஐந்து மூர்களை சிறைபிடித்தார், ஆனால் அவர்களை கொலை செய்ய மறுத்து விட்டார். ஏனென்றால் அவர்களை கொல்வதால் எப்பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். எதிரிகளுக்கு இரக்கம் காட்டுவது அவர்கள் மனதை மாற்றும், பின்னர் இரண்டு குழுக்களும் சமாதானமாக வாழலாம் என்று நம்பினார்.
அவர் சிறை பிடித்த மூர்களிலொருவர், ‘யார் வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம், ஆனால் ஒரு உண்மையான மெய்யான இராஜாவே தனது எதிரிகளுக்கு இரக்கம் காட்ட இயலும் என்று சொன்னார். ஏல் சிட்டின் அந்த அன்பான செயலினால் அவரது எதிரிகள் நண்பர்களாக மாறினர். அந்த சமயம் முதற்கொண்டு அவருடைய கூட்டாளிகளாகவும் மாறினர்.
இயேசு தான் உண்மையான அரசன். அவர் எல்லோரிடமும் நண்பராகவும், இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார், தம்மை வெறுக்கிறவர்களிடமும் தான். அவரது முன்மாதிரியை பின்பற்றுவதை விட வேறு எதை நாம் செய்ய முடியும். இப்போதே நீங்கள் இரக்கம் காட்டத்தக்க ஒருவரை உங்களால் எண்ணிப் பார்க்க இயலுமா? இரக்கமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் இருப்பது, விஷேசமாக, உங்கள் எதிரிகளிடம் நீங்கள் செய்யத்தக்க மிக வல்லமையுள்ள செயல்களில் ஒன்றாக இருக்கும்.
ஜெபம்
தேவனே, இது சுலபமாக இல்லாமலிருப்பினும், எல்லோரிடமும் இரக்கத்தைக் காட்டக்கூடியவராக இருக்க விரும்புகிறேன். என் எதிரிகளிடமும் கூட. உம்முடைய கிருபையால் இன்று நான் ஒரு இரக்கம் காட்டும் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.