“உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” – பிர 7:9
எல்லாவிதமான கோபமும், அதன் காரணம் எதுவாக இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நம்மைத் துன்புறுத்துகிறது, இதனால் அழுத்தத்தை உணர முடிகிறது. நம்முள் கோபத்தை வைத்துக் கொண்டு, கோபமே இல்லாததைப் போன்று நடிப்பது, ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் நம்மைத் தானே வருத்திக் கொள்கிறோம். நம்மை கோபப்படுத்திய நபருக்கு அது தெரிவது கூட இல்லை.
கோபத்தை எவ்வாறு கையாள்வது மற்றும் எப்படி அதை மேற்கொள்வது என்பதை கடவுள் எனக்குக் காட்டும் வரை நான் கடுமையான கோபத்துடன் போராடினேன். ஒரு நாள் என் கோபத்தை செயல்படுத்த ஒரு நேர்மறையான வழியை கற்றுக் கொண்டேன். அது எனக்கு புதிய தொடக்க இடமாக இருந்தது.
உங்கள் கோபத்தை எதிர்கொண்டு, அதை தேவனுடைய வழியில் சமாளிக்க முடிவு செய்தால், நீங்கள் அதை வெல்ல முடியும். பரிசுத்த ஆவியானவர் நிலையானதாக இருக்கவும், ஆவியின் கனியில் நடக்கவும் நமக்கு பெலனைத் தருகிறார். நம் வாழ்வில் அநீதி இழைப்பவர்களை மன்னிக்கவும், அன்பற்றவர்களை நேசிக்கவும் நமக்கு வல்லமைய கொடுத்திருக்கிறார்.
எனவே நம்முடைய கோபத்திற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். அதைச் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளே வைப்பதற்கு பதிலாக, அதை விட்டு விட உங்களுக்கு உதவுமாறு அவரிடம் கேளுங்கள். அதை பக்குவமாய் செயலாக்கி தீர்த்து விடுங்கள். அது அழுத்தத்தை குறைக்கும்.
ஜெபம்
ஆண்டவரே, எந்த கோபத்தையும் எனக்குள் வைக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் அது முட்டாள்தனம், அது உமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. என் வாழ்க்கையில் உள்ள கோபத்தை போக்க உம்முடைய உதவியை நான் கேட்கிறேன்.