“கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” – 1 கொரிந்தியர் 6:20
நம்மில் சிலர் சரீரத்தை சரியாக கவனித்துக்கொள்ளும் அளவுக்கு, நேசிக்க கற்றுக்கொள்ளவில்லை. அதை மாற்றி, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் மூன்று பெரிய தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.
நம் சரீரத்தை எவ்வாறு பராமரிப்பது என்று அறியாமல் இருக்கிறோம். மோசமான உணவு முறைகள், தவறான தகவல்கள் மற்றும் துரித உணவுகள். ஒரு ஆரோக்கியமான உணவு என்றால் என்ன? சரியான உணவை சரியான அளவில் எப்படி சாப்பிடுவது என்பது பற்றி மக்கள் குழப்பி விடப்பட்டிருக்கிறார்கள்.
நம் உருவத்தைப் பற்றிய நமது பார்வை, ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களால் திசை திருப்பப்படுகிறது. நாம் எட்ட இயலாத அழகு சீர்மையினாலே தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உடல் பருமன் இயல்பானது என்று கருதும் அளவிற்கு அது மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான நபர் எப்படி இருப்பார் என்பதை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
உடற்பயிற்சி கிட்டத்தட்ட வழக்கமற்றுப் போய்விட்டது. நாம் பெரும்பாலும் உடற்பயிற்சியில்லாமல் வாழக்கூடிய போதுமான வசதிகளை கண்டுபிடித்துள்ளோம்.
நாம் நடந்து செல்லும் அவசியம் இல்லாததால் எங்கும் நடந்து கூட செல்வதில்லை! ஆனால் உண்மை என்னவென்றால், நம் சரீரத்தை உடற்பயிற்சிக்குள்ளாகுவதிலே நம் நலம் அடங்கியிருக்கிறது.
இத்தகைய தடைகளுடன் நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள் என்று இன்று தீர்மாணியுங்கள். நம் சரீரத்தை நன்றாக பராமரிக்கும்படி தேவன் சொல்கிறார். அவர் செய்யச் சொல்லும் காரியங்களைச் செய்ய அவர் எப்போதும் நமக்கு உதவுவார். எனவே கடவுளின் பெலத்தை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடிவெடுங்கள்.
ஜெபம்
தேவனே, என் சரீரத்தை கவனித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உம்மை கனப்படுத்த விரும்புகிறேன். என்னில் கிரியை செய்யும் உம்முடைய வல்லமையால் மாற்றங்களைச் ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.