“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” – யாக்கோபு 5:16
எளிமையான விசுவாசத்தால் நிறைந்த ஜெபங்கள் தேவனுடைய கவனத்தை ஈர்க்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறேன். துரதிஷ்டவசமாக இதை நாம் கண்டு கொள்ளாமல், நம் ஜெபங்களை ஒரு பெரிய விந்தையாக மாற்றிக் கொள்கிறோம். ஆனால் உண்மையிலேயே ஜெபமானது தேவனுடனான் ஒரு எளிய சம்பாஷனையாகும்.
நாம் ஜெபிக்கும் போது பிறரை ஈர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜெபிக்காமலிருக்க எச்சரிக்கையாயிருங்கள். சில சமயங்களில் நாம் ஜெபிக்கும் போது, நம் ஜெபம், சொல் திறமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். நாம் தேவனை நம் சொற்றொடர்களால் ஈர்த்து நம் பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஆனால் தேவன் நம்முடன் பேசத்தான் விரும்புகிறார்.
ஒரு நண்பனுடன் எப்படி பேசுவோமோ அப்படியாக அவரிடம் பேச வேண்டும் என்று அவர் விரும்புகிறார். வேறு விதமான குரலிலும் அல்ல, செந்தமிழிலும் பேச வேண்டுமென்ற அவசியம் இல்லை.
நாம் மணிக்கணக்கிலே ஜெபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு ஜெப நேரத்தை கொண்டிருப்பது நல்லது. ஆனால் நாம் எவ்வளவாக ஜெபிக்கிறோமோ அவ்வளவாக ஜெபித்து விட்டு, அடுத்த முறை இன்னும் கொஞ்சம் ஜெபிக்க வேண்டும் என்று உணரும் வரை வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
நாம் ஜெபத்தை, அவரை ஆராதிப்பதற்கென்றும், அவர் நமக்கு செய்திருக்கும் அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி செலுத்தவும், அவரது உதவியைப் பெற்றுக் கொள்ளவும், நாம் செய்யும் அனைத்திலும் அவரை உட்படுத்தவும் கூடிய தருணமென்று அதை உபயோகிக்கும் போது தான், ஜெபமானது திருப்தியளிக்க்கூடியதாக இருக்கும். அவர் ஈர்க்கப்பட இங்கே இருப்பதில்லை…அவர் உங்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார். அதனால் திறம்பட செயல்படாதீர், அவரை அழையுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, ஜெபத்தை ஒரு செயலாக மாற்ற அனுமதிக்காதீர். நான் உம்மை ஈர்க்க வேண்டுமென்பதற்காக ஒரு விதமாக ஜெபிக்கவோ, ஒரு குறிப்பிட்ட நேரம் ஜெபிக்கவோ விரும்பவில்லை. நீர் என் நெருங்கிய நண்பராக இருக்கவும், என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பங்காக இருக்கவும் விரும்புகிறேன்.