
“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” – எபே 5:15-16
காலம் உண்மையாகவே பறந்து செல்கிறது. மாறாக சில சமயங்களில் அது ஊர்ந்து செல்வது போன்று காணப்படுகிறது! அது எவ்வளவு துரிதமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் காலம் கடந்து செல்கின்றது. நம்மில் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் குறிப்பிட்ட அளவு நேரம் மட்டுமே இருக்கிறது. இதை மனதில் கொண்டு நான் உங்களிடம் உங்கள் நேரத்தை கொண்டு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறேன்.
நேரமானது தேவனிடமிருந்து கிடைக்கும் ஒரு அருமையான பரிசு! நாம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அப்படியாக நம்மை மாற்ற ஒவ்வொரு நாளும் அவர் நேரம் எடுத்துக் கொள்வதை நான் பார்க்கிறேன். அதன் பின்னர் அவருடைய கிருபையாலும், இரக்கத்தாலும் நாம் அவரது நன்மையை அனுபவிக்க நம் வாழ்விலே என்ன செய்கிறாரோ அதனோடு ஒத்து செல்லவும் நேரம் கொடுக்கிறார்.
ஆகவே உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். என்னில் தேவன் என்ன செய்கின்றாரோ அதனோடு நான் ஒத்து செல்கின்றேனா? அல்லது என் வழியில் காரியங்களை செய்ய முயன்று கொண்டிருப்பதால் போராடிக் கொண்டு இருக்கிறேனா? நீங்கள் தேவனோடு போராடிக் கொண்டு இருப்பீர்கள் என்றால் உங்கள் நேரத்தை விரயமாக்கி கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தேவனோடு ஒத்து சென்று கொண்டிருப்பீர்கள் என்றால் நீங்கள் உங்கள் நேரத்தை பெரிய காரியங்களுக்காக உபயோகிக்கிறீர்கள் என்பதை நான் உறுதியாக சொல்ல முடியும்.
நினைவில் கொள்ளுங்கள்: தெய்வம் கிருபை உள்ளவர். அவர் தமது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதாக நாம் நினைக்கலாம். அதனால் அவர் நல்லவராக இருப்பதால் நம்மில் அவர் செய்து கொண்டிருப்பதோடு நாம் ஒத்த செல்ல அவர் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவர் அவசரப் பட மாட்டார். அவர் பொறுமையுள்ளவர். நம் போராட்டங்கள் தான் நம் முன்னேற்றத்தை தாமதப்படுத்துகிறது.
எனவே, நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு புதிய முறையில் காரியங்களை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டிய நேரம் இது. வாழ்க்கைக்கென்ற ஒரு புதிய தரிசனம் நம்மிலே எப்போதுமே நம் நன்மைக்காக கிரியை செய்து கொண்டிருப்பவர் மீது புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கொண்டிருப்பதை எதிர்பாருங்கள்.
நான் உங்களை உற்சாகப்படுத்துவது எல்லாம் தேவனை நம்புங்கள். உங்கள் வாழ்விலே அவர் செய்வதில் அவரோடு ஒத்துழையுங்கள். அவரே உங்கள் நோக்கத்தை திட்டமிடப்படும். அவர் உங்களுக்காக பெரிய திட்டங்களை கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும், உங்களை நேசிக்கிறார். எப்போதுமே உங்கள் நலனுக்காக செயல்படுகிறார் என்று உங்கள் இருதயங்களில் அறியுங்கள்.
ஜெபம்
ஆண்டவரே உம்மோடு நான் போராடி என் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. என்னில் நீர் நிறைவேற்றும் பெரிய காரியங்களோடு ஒத்து செல்வதில் என் நேரத்தை செலவிட விரும்புகிறேன். நான் என் நேரத்தை விரயமாக்க தொடங்கும்போது நீர் என்னை நேசிக்கிறார் என்றும், உமது நேரமே சிறந்தது என்றும் நீர் எனக்கு நினைவுபடுத்துகிறீர்.