கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். (சங்கீதம் 6:9)
ஒவ்வொரு விசுவாசியும், கடவுளிடம் பேசவும், ஜெபத்தின் மூலம் அவருடைய சத்தத்தைக் கேட்கவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அனைவரும் பரிந்து பேசும் ஊழியத்திற்கு அழைக்கப்படுவதில்லை. உதாரணமாக, கடவுள் டேவை, அமெரிக்காவின் பரிந்துரையாளராக அழைத்துள்ளார் என்று நான் நம்புகிறேன். அவர் நம் நாட்டிற்காக ஜெபிக்க
தேவவனிடமிருந்து ஒரு “அதிகாரப்பூர்வ” நியமிப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தேசிய பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களுக்கான உண்மையான சுமை, நம் நாட்டில் மறுமலர்ச்சியைக் காணும் ஏக்கம் மற்றும் அமெரிக்காவைப் பற்றிய விஷயங்களில் ஆழ்ந்த, நீடித்த ஆர்வம். அவர் அமெரிக்க வரலாற்றை விடாமுயற்சியுடன் படிக்கிறார் மற்றும் நம் நாட்டின் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தொடர்ந்து அறிந்திருக்கிறார். அவரது பிரார்த்தனையில் ஒரு அசாதாரண உற்சாகமும் உள்ளது. அவர் பரிந்து பேசும் ஊழியத்தில் செயல்படும் நபர் என்று நான் சொல்கிறேன்.
1997 முதல், டேவ் ஜெபிப்பதையும், அழுவதையும், அமெரிக்காவின் சார்பாக பரலோகத்திற்கு விண்ணப்பங்களை ஏறெடுப்பதையும் நான் பார்த்து வருகிறேன். அவர் செய்யும் விதத்தில், நான் நம் நாட்டைப் பற்றி அழவில்லை, ஆனால் நான் கவலைப்படவில்லை அல்லது எங்கள் தலைவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்யவில்லை என்று அர்த்தமல்ல. டேவைப் போன்ற பேரார்வம் இருக்க வேண்டும் என்று நான் என்னை கட்டாயப்படுத்த முடியாது என்று அர்த்தம். ஏனென்றால் அந்த ஆர்வம் கடவுள் கொடுத்தது. கடவுள் டேவையும், என்னையும் ஒரு குழுவாகப் பயன்படுத்துகிறார் என்பது, இதன் பொருள்; டேவ் ஒரு இடத்தில் செயல்படுகிறார், நான் இன்னொரு இடத்தில் செயல்படுகிறேன். டேவ் செய்யும் வழியில் நான் பரிந்து பேசாததால், எனக்குள் என்ன தவறு என்று நான் யோசிக்க ஆரம்பித்தால், நான் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் – அது கடவுள் என்னைச் செய்ய அழைத்ததை நிறைவேற்றுவதைத் தடுக்கும். ஆனால், எனது நிலைப்பாட்டில் நம்பிக்கை வைத்து, அதில் சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்தினால், ஒவ்வொரு முறையும் எங்கள் அணி வெற்றி பெறும். கடவுள் எல்லாவற்றையும், அனைவருக்கும் ஒதுக்குவதில்லை. பரிசுத்த ஆவியானவர், அவர் பொருத்தமாக இருக்கும் விதத்தில், காரியங்களைப் பிரிக்கிறார், மேலும் நாம் செய்ய வேண்டியது, நமது பங்காகும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களை வழிநடத்தும் வழியில் நிதானமாக ஜெபிக்கவும்.