“இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.” – 1 கொரி 12:11
மக்கள் என்னிடம், தேவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் வரங்களை எப்படி கண்டறிந்து வளர்த்திக் கொள்வது என்பதை பற்றி கேட்பதுண்டு. நான் கண்டு பிடித்திருக்கும் பயனுள்ள சில வழிகள் இதோ:
- தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் பெலன்களில் கவனம் வையுங்கள். உங்கள் பெலன்களின் மேல் நோக்கம் வைப்பதானது தேவன் உங்கள் வாழ்விலே உங்களுக்கென்று வைத்திருக்கும் அழைப்பை நிறைவேற்ற உங்களுக்கு உதவும்.
- உங்கள் வரத்தை பயன்படுத்துங்கள்.நீங்கள் செய்ய விரும்பும் ஏதாவதொன்றை கண்டுபிடித்து அதை மீண்டும் மீண்டுமாக செய்யுங்கள். என்ன நடக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்களா? உங்களைப் பற்றி நன்றாக உணருவீர்கள். ஏனென்றால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டதாக உணர மாட்டீர்கள்
- வித்தியாசமாக காணப்பட தைரியமாக இருங்கள். தனித்தண்மையுடன் காணப்படும் உங்களை அரவணைத்துக் கொள்வதற்கு பதிலாக மற்றவர்களையெல்லாம் போன்று இருக்க முயற்சிப்பதாலேயே சந்தோசமின்மை ஏற்படுகின்றது.
- குறை கூறுபவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்களென்பதில் உறுதியாக இருந்து பிறர் சொல்வதை கேட்டு, அவர்கள் அங்கீகாரத்திற்காக அல்லது அவர்களுடன் நீங்கள் ஒத்துச் செல்ல வேண்டுமென்பதற்காக அல்லது கட்டாயத்திற்காக உங்களை மாற்றிக் கொள்ள இயலும். கிறிஸ்துவுக்குள் நீங்கள் யாராக இருக்கிறீர்களென்பதில் உறுதியாக இருங்கள்.
தேவன் உங்களுக்குள் மேண்மையை நிலையாட்டிருக்கிறார். அவர் உங்களுக்கு கொடுத்திருக்கும் வரங்களை உபயோகிக்கும் அந்த மிகப்பெரிய சாதனையின் தொடக்கம் நன்றாக இருக்கட்டும்.
ஜெபம்
தேவனே, நீர் எனக்கு கொடுத்திருக்கும் வரங்களை வளர்க்க விரும்புகிறேன். உம்மை பின்பற்றவும், எனக்குள்ளே நீர் கொடுத்திருக்கும் வரங்களையும், திறன்களையும் வளர்க்கவும் தேவையான தைரியத்தை கொடுப்பீராக.