“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,” – யோவாண் 8:36
எந்தவொரு அடிமைத்தனத்திலும் வாழ கடவுள் நம்மை உருவாக்கவில்லை என்பதால், கடவுள் நமக்குக் கிறிஸ்துவில் கொடுத்த அனைத்தையும் அனுபவிக்கும் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியும். அவர் நமக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார், அதை அனுபவிப்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நம் வாழ்வில், நாம் விடுதலையோடு இருக்க விரும்பினால் மட்டும் போதாது, நாம் செயல்பட வேண்டும். நாம் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது அவசியம். இதன் பொருள் நாம் வார்த்தையை, பலனை பெறுவதற்கு மட்டும் கேட்காமல், படிக்காமல் அது என்ன சொல்கிறதோ அதை நாம் செய்ய வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விடுதலையை அனுபவிக்கிறீர்களா? இயேசுவில் உங்களுடைய விடுதலையை தேட தேவன் உங்களை ஊக்குவிப்பார் என்று நான் ஜெபிக்கிறேன். பாவத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அவர் சிலுவையில் மரித்ததால், நீங்களும் நானும் வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் விடுபட முடியும்.
விடுதலை உங்களுடையது, இப்போதே போய் அதை எடுத்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவில், தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்க விடுதலையோடு இருங்கள்.
ஜெபம்
தேவனே, பாவம், அடிமைத்தனம் மற்றும் எந்த விதமான ஒடுக்கு முறையிலிருந்தும் நான் விடுதலையை கண்டு கொண்டேன். என் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதன் மூலம், என் விடுதலைக்காக நடவடிக்கை எடுக்க நான் தேர்வு செய்கிறேன்.