“ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச்சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.” – யோசுவா 3:3
ஏதாவது புதிய வாய்ப்புகளை நீங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறீர்களா? அந்த வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும், ‘உடன்படிக்கைப் பெட்டியைப் பின்பற்றுவது’ முக்கியமானதாகும். அப்படியென்றால் என்ன? சில சமயங்களில்லே நாம் அந்த பழைய நாற்றமெடுக்கும் சூழ்னிலைகளையே பற்றிக் கொண்டிருப்போம். ஏனென்றால் அவைகள் நமக்கு பரிட்சயமானவைகள் என்பதாலும், தெரியாத காரியங்களை செய்ய அஞ்சுவதாலுமே.
மேலும் சில சமயங்களிலே நமக்கு முன் ஏதோ புதியதொன்று இருக்கக் கண்டு அதை செய்வதை தேவனுடைய சமயத்திற்கு முன்பாகவே செய்ய விரும்புகிறோம். யோசுவா 3:3 ல் தேவன் இஸ்ரவேலரிடம் உடன்படிக்கை பெட்டியைப் பின்பற்றுவதைக் குறித்து பேசுகின்றார். உடன்படிக்கை பெட்டி தேவனுடைய அபிஷேகத்தை…பிரசன்னத்தை…சித்தத்தைக் குறிக்கின்றது. நம் சித்தத்தையோ பிறருடைய சித்தத்தையோ பின்பற்றாமல், தேவனுடைய சித்தத்தை பின்பற்றக் கற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.
உங்களுக்காகவும் எனக்காகவும் தேவன் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறார். அந்த திட்டம் நிறைவேறுவதைக் காணும் ஒரே வழி நம் மாம்சத்தையோ, மற்றவர்களையோ அல்லது நம் உணர்ச்சிகளையோ பின்பற்றாமல் உடன்படிக்கை பெட்டியையோ அல்லது தேவ சித்தத்தையோ பின்பற்ற வேண்டும்.
உங்கள் வாழ்க்கைக்கான தேவ சித்தம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி முடிப்பதற்கான வழியையும் அவர் ஏற்படுத்தித் தருவார் என்பதை மறந்து விடாதீர்.
ஜெபம்
தேவனே, இஸ்ரவேலரைப் போன்று நான் உடன்படிக்கைப் பெட்டியை பின்பற்ற வேண்டுமென அறிந்திருக்கிறேன். என்னுடைய புதிய வாய்ப்புகளுக்கான நேரத்தை விட உம்முடைய சித்தத்தைப் பற்றியே நான் கரிசனையாக இருக்கிறேன். உம்மை நான் பின்பற்றுகையிலே, எனக்காக நீர் கொண்டிருக்கும் திட்டத்தை நிறைவேற்ற, நீர் ஒரு வழியை ஏற்படுத்துவீர் என்பதை அறிந்திருக்கிறேன்.