
“இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” – 1 பேதுரு 1:6-7
உடைக்கப்படுதல் என்ற சொல் சிலருக்கு பயத்தைத் தரக்கூடும். ஆனால் இது உண்மையில் மோசமான வார்த்தை அல்ல. தேவன் நம்முடைய ஆவியை உடைக்க ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் அவர் அந்த வெளிப்புற ஷெல்லை உடைக்க விரும்புகிறார். நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதை தடுக்கும் மாம்சத்தை உடைக்க விரும்புகிறார். பெருமை, முரட்டாட்டம், சுயநலம் மற்றும் சார்ந்திராமை போன்றவற்றை உடைக்க அவர் விரும்புகிறார். நாம் அவரை முழுமையாக நம்பியிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். பாடுகள் நம்மை அந்த நிலைக்கு கொண்டு வருகிறது.
சில நேரங்களில் மக்கள் சோதனை அல்லது துன்பத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது கூட, வார்த்தையைக் கற்றுக் கொள்வதற்கும் கீழ்ப்படிவதற்கும், சோதனைகள் இன்னும் வருகின்றன. சில சமயங்களில் சோதனைகள் நம் விசுவாசத்தை சோதிக்கவும் சுத்திகரிக்கவும் வருகின்றன.
இந்த சோதனைகள் உங்கள் வழியில் வரும்போது, அவற்றைத் அரவணைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவை உண்மையான உடைபடுதலுக்குள்ளாக வழிநடத்தும். நாம் மாம்சத்தின்படி அல்ல ஆவியின் படி வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இது நம்மை அவரிடமிருந்து விலக்கி வைக்கும் எந்தவொரு பாவமான அல்லது சுய நலமான தண்மைகளையும், பழக்கவழக்கங்களையும் உடைக்க நாம் அவரை அனுமதிக்கும் போது ஆவியின் படி வாழ்வது அதிக எளிதாகிறது.
இன்று நீங்கள் கடவுளுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? உடைபடுதல் எதிர்காலத்தில் உங்களை பெரிய காரியங்களுக்கு நேராக வழி நடத்தும் என்பதை அறிந்து அதை அரவணைத்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, சில நேரங்களில் எனக்கு உடைபடுதல் தேவை என்பதை நான் உணர்கிறேன். அது வசதியாக இருக்காது, ஆனால் உம்மிடமிருந்து என்னை விலக்கி வைக்கும் எதையும் உடைத்து அகற்ற நான் உம்மை அழைக்கிறேன்.