
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள் ! (சங்கீதம் 34:14)
நாம் தேவனைப் பின்பற்றும்போது, சமாதானத்தைத் தொடர்கிறோம் என்பதைப் பற்றி நான் நிறைய கற்பிக்கிறேன், ஆனால் தவறான சமாதானம் என்று ஒன்று இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டு, அதைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். உதாரணமாக, நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வலுவான ஆசை இருந்தால், அது உண்மையில், நம் உணர்ச்சிகளில் இருந்து வரும் ஒரு தவறான சமாதானத்தை உருவாக்கலாம். காலப்போக்கில், இந்த பொய்யான சமாதானம் மறைந்து, தேவனின் உண்மையான சித்தம் வெளிப்படுகிறது. ஆகவே, முக்கியமான முடிவுகளை எடுக்க, நாம் ஒருபோதும் அவசரப் படக்கூடாது. சிறிது காலம் காத்திருப்பது எப்போதும் புத்திசாலித்தனமாகவும், விவேகமாகவும் இருக்கும்.
இதோ ஒரு உதாரணம். நானும் டேவும் மிகவும் நேசிக்கும் ஒருவர் தேவையில் இருந்தார், நாங்கள் அவருடைய தேவையை பூர்த்தி செய்ய விரும்பினோம். அவ்வாறு செய்வது அந்த நபருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். அந்த நபருக்கான நீண்டகால ஆசையை நிறைவேற்றியிருக்கும். நான் மிகுந்த உற்சாகமடைந்து, நாங்கள் இருவரும் அவருக்கு உதவ வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். நாங்கள் எங்களுடை திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தோம், ஆனால் நாங்கள் அதைத் தொடர்ந்து செல்லும் போது, நான் குறைந்த சமாதானத்தையே உணர்ந்தேன். இது ஒரு சிக்கலை உருவாக்கியது, ஏனென்றால் நாங்கள் உதவ உறுதியளித்திருந்தோம், ஆகவே நான் என் வார்த்தையை மீற விரும்பவில்லை. தப்பு செய்து விட்டேன் என்று சொல்ல நான் தயங்கவில்லை, ஆனால் நான் எங்களை நம்பியவரை ஏமாற்ற விரும்பவில்லை.
சில வாரங்கள் கடந்தது, நான் நிலைமையைப் பற்றி ஜெபித்துக் கொண்டிருந்தேன். கடைசியில், அந்த நபரிடம் சென்று, “நம் திட்டம் ஏதோ ஒரு காரணத்தினால் சரியில்லை; எனக்கு இதில் எந்த சமாதானமும் இல்லை என்று சொன்னேன். எனக்கு மிகவும் நிம்மதி தரும் விதத்தில், மற்ற நபரும் அவ்வாறே உணர்ந்தார். காலப்போக்கில், இந்த திட்டத்தின் மீதான எனது உற்சாகம், ஒரு தவறான சமாதானத்தை உருவாக்க அனுமதித்திருந்தேன்.
இன்று உங்களுக்கான தேவனுடைய வார்த்தை: உண்மையான சமாதானம் உங்களுக்குள் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்த காத்திருக்காமல், தீவிரமாக முடிவுகளை எடுக்காதீர்கள்.