“இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.” – அப்போஸ்தலர் 20:35
பல வருடங்களுக்கு முன், பிறருக்கு கொடுப்பதை பற்றி தேவன் எவ்வளவு உறுதியாக உணர்கிறார் என்பதைப் பற்றி நான் அறியாதவளாக இருந்தேன். அதற்குமுன் நான் ஒரு சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன். ‘முதலாவது நானே’ என்ற வாழ்க்கை. நான் சந்தோசமாக இருக்க தொடர்ச்சியாக முயன்று கொண்டு, போராடிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் எப்போதுமே களைப்புற்றவளாகவும், மன அழுத்தத்துக்கு உள்ளானவளாகவும், நிச்சயமாகவே சந்தோசமற்றவளாகவும் காணப்பட்டேன்.
ஆயினும், தேவன் சந்தோஷத்தை பற்றிய இரண்டு காரியங்களை எனக்கு கற்பித்தார். பிறருக்கு ஏதோவொரு நன்மை செய்வதில்தான் சந்தோசம் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தபோது, அனுதினமும் பிறருக்கு வேண்டுமென்றே உதவும் வழி என் வாழ்க்கைமுறையாக்கி கொள்ள தொடங்கினேன்.
அப்போஸ்தலர் 20:35 ல் அது அற்புதமானது. கொடுப்பது, வாங்குவதைவிட அதிக சந்தோஷத்தை கொண்டு வருகிறது. மேலோட்டமாக பார்ப்போம் என்றால் அது அர்த்தமற்றதாக காணப்படுகிறது. பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையே கொண்டிருக்கும் கலாச்சாரத்தில், உலகத்திலே நாம் வாழ்கிறோம். எனவே அநேக சமயங்களில் அனேக பொருட்களை கொண்டிருக்கும் மக்களை பார்த்து அவர்கள் உண்மையிலேயே சந்தோசமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம்.
ஆனால் உண்மையான சந்தோஷமானது பிறருக்கு கொடுக்கும் வாழ்க்கை முறையில் கிடைக்கிறது. அப்படி என்றால் நீங்கள் கோடிக்கணக்காக கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. தேவன் சொல்வதெல்லாம் உங்களிடம் இருப்பதை கொடுங்கள் என்பதே.
‘நான் போதுமான அளவு செய்கின்றேன், நான் திருப்தியாக இருக்கின்றேன்’. என்று சொல்பவர்களை போன்று இருக்க நான் ஒரு போதும் விரும்புவதில்லை. உண்மையிலேயே அது ஒரு போதும் திருப்தியை கொடுப்பதில்லை. என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவாக மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.
இன்று நீங்கள் ஏதாவது கொடுக்க ஒருவரை கண்டுபிடியுங்கள். உங்கள் பரிசு எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும் சரி. ஒருவேளை அது பணம், நேரம் அல்லது ஊக்கமாக இருக்கலாம். நீங்கள் பெற்றுக் கொண்டிருப்பதை கொடுங்கள். கொடுப்பதால் ஏற்படும் உண்மையான சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
ஜெபம்
தேவனே, உண்மையான சந்தோஷம் கொடுப்பதில் ஏற்படுகிறது, பெற்றுக்கொள்வதில் இல்லை என்று அறிந்திருக்கிறேன். என்னுடைய சுயநலமான விருப்பங்களை மறந்து என்னை சுற்றிலும் இருப்பவர்களுக்கு கொடுப்பதை நாடுவதால் ஏற்படும் உண்மையான சந்தோசத்தில் வாழ விரும்புகிறேன்.