உண்மையான விசுவாசம்

உண்மையான விசுவாசம்

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. (1 தீமோத்தேயு 1:5)

நம்முடைய விசுவாசத்திலோ, ஜெபத்திலோ நாம் குழந்தைத்தனமாக இருக்க விரும்ப மாட்டோம்; நாம் குழந்தையாக இருக்க வேண்டுமானால் விரும்புவோம். தேவனுடனான நமது உறவை, நாம் சிக்கலாக்குவதை அவர் விரும்பவில்லை. அவர் உண்மையான இருதயத்தைத் தேடுகிறார், ஏனென்றால் அவர் இருதயத்தின் தேவன். நாம் விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், இது ஒரு உணர்ச்சி அல்ல, ஆனால் கண்ணுக்கு தெரியாத மண்டலத்தை பாதிக்கும் ஒரு ஆவிக்குறிய வல்லமை. தேவன் ஒழுங்காக கிரியைகளை நடப்பிக்கிறார், ஆனால் அதே சமயத்தில் அவர் விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களின் தேவன் அல்ல; ஆவியால் வழிநடத்தப்படாத அல்லது ஒரு முறையைப் பின்பற்றி, ஒரு குறிப்பிட்ட தோரணையில் நீண்ட, இழுக்கப்பட்ட ஜெபங்களை ஜெபிக்க முயற்சிப்பதில் நாம் சோர்வடைவதை அவர் விரும்பவில்லை. அது ஏதோவொரு சட்டத்திற்கு கீழ்படிவது போல் இருக்கும், மேலும் அது எப்போதும் தேவனுடனான நமது உறவை எடுத்துப் போடும். “ஆவி உயிர்ப்பிக்கிறது, ஆனால் எழுத்தோ கொல்லும்” (பார்க்க 2 கொரிந்தியர் 3:6).

நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, தேவனுடனான நமது தொடர்பு, ஜீவனால் நிரப்பப்படும். பலர் செய்வதைப் போல, சரியான நேரத்தைக் கொடுக்க வேண்டி, கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடவுளிடம் பேசுவதையும், கேட்பதையும் நம் சொந்த மாம்சத்தின் ஒரு வேலையாக அணுகும்போது, ஐந்து நிமிடங்கள் ஒரு மணிநேரமாகத் தோன்றலாம், ஆனால் நம் ஜெபம் பரிசுத்த ஆவியால் உற்சாகப்படுத்தப்படும் போது, ஒரு மணிநேரம் ஐந்து நிமிடங்களாகத் தோன்றும். நான் நிறைவாகவும், திருப்தியாகவும் உணரும் வரை கடவுளுடன் ஜெபிக்கவும் ஐக்கியம் கொள்ளவும் விரும்புகிறேன். கடவுளுடன் உங்கள் நேரத்தை நிதானமாக அனுபவிக்க முயற்சி செய்யுங்கள், அது மிகவும் பலனளிக்கும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: குழந்தையைப் போல் இருக்க முயற்சி செய்யுங்கள்; குழந்தைத்தனமாக அல்ல.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon