“உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.” – யோவாண் 4:23
ஆராதனையென்பது பாடல்களை பாடுவதற்கும் அதிகமானது. அது இருதயத்தின் நிலையாகும். ஒரு பாடல் கூட பாடாமலே தேவனை மனதார ஆராதிக்க இயலும். தேவனை ஆராதிப்பது நம் இருதயங்களில் பிறக்கிறது. நம் எண்ணங்களில் நிரம்பி, நாம் பேசும் வார்த்தைகளின் மூலமாகவும், நாம் வாழும் வாழ்க்கை முறையிலும் அது வெளிப்படுகின்றது.
இந்த உலகம் அனேக வேளைகளிலே ஆராதனையை ‘பக்திக்குரியது’ என்று சொல்கிறது. ஆராதனையைப் பற்றி வேதம் சொல்கிறதோடு மாறுபடுகிறதில்லைதான். அது ஒரு தனிப்பட்ட உறவையும், தம் முழு இருதயத்தோடும் தேவனை நேசிப்பவரின் பக்திக்குறிய வெளிப்பாட்டையும் பற்றியது. அதுவே உண்மையான ஆராதனை.
தேவன் தம்மை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பவர்களை தேடுகிறார் என்று வேதம் சொல்கிறது. அவர் தம்மை எல்லோரும் ஆராதிக்க வேண்டுமென்று விரும்புகிறதில்லை. அவருடைய சத்தியத்திலே உண்மையாக வாழும் மக்களை விரும்புகிறார். பயத்தினிமிதமாகவோ, கடமைக்காகவோ, பக்திக்காகவோ மக்கள் தம்மை ஆராதிக்க அவர் விரும்புகிறதில்லை.
உண்மையான ஆராதனை தேவனுடனான நெருக்கத்தின் விளைவாக ஏற்படுகின்றது. தேவனை உங்கள் முழு இருதயத்தோடும் ஆராதியுங்கள். ஆவியோடும், உண்மையோடும் ஆராதிப்பவராக இருங்கள்.
ஜெபம்
தேவனே, உம்மை உதட்டளவில் ஆராதனை செய்ய விரும்பவில்லை. மாறாக, உம்மை உண்மையாய் ஆராதனை செய்வதற்காய், உம்முடன் நெருக்கமாக இணைந்திருப்பதற்காய் என் வாழக்கையை கொடுக்கிறேன். நீர் எனக்கு மிகவும் நல்லவராக இருக்கிறீர். உம்மை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க விரும்புகிறேன்.