உண்மையை எதிர்கொள்வது சந்தோசத்தைக் கொண்டு வருகிறது

உண்மையை எதிர்கொள்வது சந்தோசத்தைக் கொண்டு வருகிறது

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.” – 2 கொரி 13:5

தங்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லாத வரை யாரையும் அந்த பிரச்சினையிலிருந்து விடுவிக்க முடியாது. ஒரு குடிகாரன், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவன் அல்லது தங்கள் வாழ்க்கையின் மேல் கட்டுப்பாட்டை இழந்த எவரும், “எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது, அதற்கு எனக்கு உதவி தேவை” என்று சொல்லும் வரை அவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்”.

நம்மால் அந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருந்தாலும் கூட, அந்தப் பிரச்சினை அப்படியே நிலைத்திருக்கவும், பெரிதாகி நம் முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்த நாம் அனுமதிக்காமலிருக்கலாம். நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நாம் இப்பொழுது எப்படி இருக்கிறோமோ அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் அப்படியே இருக்க வேண்டியதில்லை. காரியங்களை மாற்றுவதற்கு நாம் நேர்மறையான காரியங்களை செய்யத் தொடங்கலாம். அதை நாம் பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டு செய்யலாம்.

உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், நீங்கள் உண்மையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் சில தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.

நம்மை நாமே சோதித்து அறிய வேண்டும். அது அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் இயேசு கிறிஸ்து உங்களிடத்தில் இருக்கிறார், கடந்த கால பிரச்சினைகள் அனைத்திலும் அவர் உங்களுக்கு உதவுவார்.

உண்மையை எதிர்கொள்ளுங்கள் – இது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கலாம்!


ஜெபம்

பரிசுத்த ஆவியானவரே, நான் உண்மையை மறுத்து, என் பிரச்சினைகளைப் பற்றிய பயத்தில்  வாழ விரும்பவில்லை. நான் என்னை ஆராய்ந்து மதிப்பீடு செய்து இந்த பிரச்சினையின் அடித்தளத்திற்கு செல்ல விரும்புகிறேன். ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவதற்கு, அவற்றினூடாக கடந்து செல்ல எனக்கு உதவுவீர் என்று அறிந்திருக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon