உதவி!

உதவி!

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்! (ஏசாயா 41:13)

நாம் எவ்வளவு நன்றாக நம் வாழ்க்கையை நடத்துகிறோம் என்று நினைத்தாலும், எல்லாவற்றிலும் நமக்கு உதவி தேவை என்பதே உண்மை. நம் அன்றாட வாழ்வில் நமக்கு எல்லாவிதமான உதவிகளும் தேவை. பெரும்பாலும், நமக்கு எவ்வளவு உதவி தேவை என்பதை உணர நீண்ட நேரம் எடுக்கும். சுதந்திரமாகவும், உதவியின்றியும் செய்ய வேண்டியதை நம்மால் செய்ய முடியும் என்று நம்ப விரும்புகிறோம். இருப்பினும், கர்த்தர் நமக்கு ஒரு தெய்வீக உதவியாளரை அனுப்பினார்; ஆகவே, நமக்கு உதவி தேவை. கடவுளின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் போது இயேசுவே நமக்காக தொடர்ந்து பரிந்து பேசுகிறார் (எபிரெயர் 7:25; ரோமர் 8:34 ஐப் பார்க்கவும்). மேலும் நம் வாழ்வில் கடவுளின் தலையீடு நமக்குத் தொடர்ந்து தேவை என்று அது நமக்குச் சொல்கிறது. நாம் உண்மையில் மிகவும் தேவையுள்ளவர்கள் மற்றும் சொந்தமாக வாழ்க்கையை சரியாகக் கையாள முடியாதவர்கள்.

சிறிது காலம் நம்மையும், நம் வாழ்க்கையையும் நாம் நன்றாக நிர்வகிப்பதாகத் தோன்றினாலும், தெய்வீக உதவியைப் பெறுவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த பலத்தில் வாழ்ந்தால், விரைவில் ஏதாவது நடந்து, காரியங்கள் வீழ்ச்சியடையத் தொடங்குகின்றன.

பல சமயங்களில், பிரச்சனை வரும் வரை நன்றாக இருக்கிறோம். அது, திருமண முறிவு, நேசிப்பவரின் மரணம், வேலை இழப்பு அல்லது முக்கியமான வேறு ஏதாவது வடிவத்தில் வரலாம். ஆனால் இறுதியில், நாம் அனைவரும் நமது தேவையை அங்கீகரிக்க வேண்டிய ஒரு புள்ளியை அடைகிறோம்.

நீதி, சமாதானம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றால் நிரப்பப்பட்ட வாழ்க்கையை நாம் வாழ விரும்பினால் (ரோமர் 14:17 ஐப் பார்க்கவும்), நமக்கு உதவி தேவை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், மேலும் கடவுள் அனுப்பிய பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதைப் பெற வேண்டும்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உதவிக்கான உங்கள் தேவையை ஒப்புக்கொண்டு, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவுவார் என்று நம்புங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon