
“நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” – யோவாண் 17:15-16
இன்று பலர் அதிக சுமை கொண்டவர்களாகவும், அளவுக்கு மீறி தங்களை அலட்டிக் கொண்டும் வாழ்கின்றனர். இதன் விளைவாக, அவர்கள் சரிவின் விளிம்பில் உள்ளனர்-எல்லா வகையான மன அழுத்தத்தோடும், மன உளைச்சலோடும், உற்சாகமிழந்து எதிர்மறையுடன் வாழுகின்றனர்.
ஆனால் நற்செய்தி என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகில் இருந்தாலும், யோவான் 17 ன் படி, நாம் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. உலகத்தினரைப் போன்று பிரதிக்கிரியை செய்ய வேண்டியதில்லை. நம் மனப்பான்மையும், அணுகுமுறையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.
இந்த உலகத்தினர் கஷ்டம் வரும் போது வருத்தமாகவும் சோர்வாகவும் காணப்படுகின்றனர். ஆனால் இயேசு யோவான் 14:27 ல் சொன்னார், நாம் கலக்கமடைவதையும், வருத்தப்படுவதையும் அனுமதிக்கக் கூடாது என்று சொல்லுகிறார். இந்த வசனம் நமது மனப்பாண்மை உலகத்தாரை விட வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சரியான மனப்பாண்மை மற்றும் அணுகுமுறை ஒரு சூழ்நிலையை முழுவதுமாக மாற்றும் என்பதை நான் கவனித்திருக்கிறேன். சரியான மனப்பாண்மை, கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையிலே கிரியை செய்து உங்களுக்கு உதவ கதவைத் திறக்கிறது. சரியான மனப்பாண்மைதான் நீங்கள் இந்த உலகில் இருந்தாலும், உலகத்தால் சூழப்பட்டிருந்தாலும், உலகத்தாரைப் போல் இல்லாத படி வாழ செய்கிறது.
நாம் கிறிஸ்துவில் இருப்பதால், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் அணுக முடிகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, நான் இந்த உலகில் இருந்தாலும், உலகத்தால் இருக்க வேண்டியதில்லை என்று சொல்லிருக்கிறீர். நான் இன்று உம்முடைய மனப்பாண்மையை தேர்வு செய்கிறேன். இந்த உலகத்தின் மத்தியிலும், உம்முடைய சமாதானத்துடனும், கிறிஸ்துவின் சிந்தையுடனும் பிரதிக்கிரியை செய்வதை நான் தெரிந்து கொள்கிறேன்.